யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி, பதில் அதிபராக M.S.F. சப்னா நியமனம்.
மேற்படி எமது பாடசாலையின் அதிபர் பதில் கடமைக்கான ஆவணங்கள், பொறுப்புக்கள் மற்றும் நியமனக் கடிதம் உள்ளிட்டவற்றை கடந்த 2025.08.28 ஆம் திகதி யாழ்ப்பாணம் கோட்டக் கல்விப் பணிப்பாளர் அவர்கள் மேற்படி ஆசிரியரிடம் அதிபர் சாபி மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளர் முன் வழங்கி வைத்திருந்தார்.
கோட்டக் கல்விப் பணிப்பாளர் முன்னிலையில் அதிபர் என்.எம்.சாபி அவர்கள் அதிபர் பதில் கடமைக்கான லொக் பதிவை மேற்படி ஆசிரியருக்கு பெயரிட்டதுடன், புதிய பதில் கடமைக்கான பொறுப்பையும் ஆசிரியை எம்.எஸ்.எப்.சப்னா (அதிபர் - பதில் கடமை) அவர்கள் லொக் பதிவில் ஒப்பமிட்டு பாடசாலையின் பொறுப்பை சாபி அவர்களிடமிருந்தும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அந்த வகையில் 2025.08.29 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியின் அதிபர் (பதில் கடமைக்கான) பொறுப்பை ஆசிரியை எம்.எஸ்.எப்.சப்னா அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்.
எனவே பெற்றோர்கள் தமது மாணவர்கள் தொடர்பில் தேவையான நிர்வாக நடவடிக்கைகளுக்கு 2025.09.01 முதல் புதிய அதிபர் (பதில் கடமை புரியம்) ஆசிரியை எம்.எஸ்.எப்.சப்னா அவர்களை வழமையான பாடசாலை நேரத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாட முடியும்.
வெகு விரைவில் பதில் கடமை பொறுப்பேற்றுள்ள அதிபர் எம்.எஸ்.எப்.சப்னா அவர்களின் தலைமையில் பாடசாலை நிர்வாகக் கூட்டங்கள், ஆசிரியர்களுடனான கலந்துரையாடல்கள் இடம்பெற்று பாடசாலையின் நிர்வாக நடவடிக்கைகள் எவ்வித நெருக்கீடுகளும் இன்றி வழமை போன்று முன் கொண்டு செல்லப்படும் என்பதும் விசேட அம்சமாகும்.
பாடசாலை ஊடகப்பிரிவு
யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி
2025.09.02

Post a Comment