Header Ads



இலங்கை ஊடகவியலாளர்கள் காஸா சென்று கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை, அங்கு சுடுகாடு தான் உள்ளது


சுதந்திர பாலஸ்தீனம் உருவாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். இந்தியாவில் உள்ள  இஸ்ரேல் தூதரகத்துக்கு இலங்கையின் ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்று, அவர்களை இலங்கையின் தூதுவர் புகைப்படமெடுத்துள்ளார். இந்நிலைக்கு செயற்பட்டுள்ளதையிட்டு தனிப்பட்ட முறையில் கவலையடைகிறேன்.


இலங்கையின் ஊடகவியலாளர்கள் காஸாவுக்கு சென்று புதிதாக கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை. அங்கு  சுடுகாடு தான் உள்ளது. துறைமுக அதிகார சபையின் ஒருவர் இஸ்ரேல் சென்றதாக குறிப்பிடப்படுகிறது. இதனை ஆராய்ந்து பார்த்தேன். அந்த நபர் தனிப்பட்ட பயணத்துக்காகவே சென்றுள்ளார். பலஸ்தீனத்தின் விடுதலை மற்றும் அமைதிக்காகவே நாங்கள் செயற்படுகிறோம் எமது கொள்கையில் எவ்வித மாற்றமுமில்லை 


 - அமைச்சர் பிமல் ரத்நாயக்க -

No comments

Powered by Blogger.