பாதுகாப்பு அம்சங்கள், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாகன இலக்கத்தகடுகள் நவம்பர் முதல் விநியோகம்
புதிய பாதுகாப்பு அம்சங்கள், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாகன இலக்கத்தகடுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும். தற்போது சந்தையில் வாகன இலக்கத்தகடுகள் இல்லாத பெருமளவான வாகனங்கள் உள்ளன. அரசியல், ஊழல், பொறுப்பற்ற தன்மையால் மோட்டார் வாகனத் திணைக்களம் சுமார் 10 ஆண்டுகளாக முன்னேறவில்லை. புதிய சாரதி அனுமதிப் பத்திரம் தயாரிக்கப்படும், வாகன இலக்கத்தகடுகள் இல்லாத வாகனங்களுக்கு அடுத்த வாரம் தற்காலிக தீர்வுகள் வழங்கப்படும்.
இன்று (26) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

Post a Comment