Header Ads



வாழ்க்கை என்பது, மற்றவர்களின் தவறுகளைக் கண்டுபிடிப்பதற்கானது அல்ல...


💕ஒருமுறை, தூரத்தில் சிலர் நெருப்பு மூட்டியிருப்பதைக் கண்ட கலீஃபா உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள், அவர்களை நோக்கி "ஓ! ஒளியின் மக்களே!" என்று அழைத்தார். "ஓ! நெருப்பின் மக்களே!" என்று அழைத்தால், அவர்களின் மனம் புண்பட்டுவிடுமோ என்று அஞ்சினார்கள்.


💕ஒரு வயதான பெரியவர் தவறான முறையில் வுழூ (அங்கசுத்தி) செய்வதை கண்ட ஹஸன் மற்றும் ஹுஸைன் (ரலி) ஆகிய இருவரும் அவரிடம் சென்று, "எங்களில் யார் சரியாக வுழூ செய்யவில்லை என்று நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும்" என்று கூறினர். பிறகு, அவர் முன்னால் சரியான முறையில் வுழூ செய்து காட்டினர். இதைக் கண்ட அந்தப் பெரியவர் சிரித்துக்கொண்டே, "வுழூ செய்யத் தெரியாதவன் நான் தான்" என்று கூறினார்.


💕 ஒருவர் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களிடம் வந்து, "தொழுகையை விடுபவர் குறித்து தீர்ப்பு என்ன?" என்று கேட்டார். அதற்கு இமாம் அவர்கள், "அவரை நம்முடன் பள்ளிவாசலுக்கு அழைத்துச் செல்வதுதான் சரியான தீர்ப்பு " என்று பதிலளித்தார்.


வாழ்க்கை என்பது, மற்றவர்களின் தவறுகளைக் கண்டுபிடிப்பதற்கானது அல்ல, அது வாழ்வதற்கான ஒரு நல்ல வழி...❤️


(Dr Hafeed Nadwi)

No comments

Powered by Blogger.