சமூகத்திற்கு ஒரு வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் வழங்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.
இந்தோனேசியாவில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையின் பின்னர் கைது செய்யப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களை அடுத்த இரண்டு அல்லது 2 நாட்களுக்குள் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இன்று (28) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர்,
தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வாக்குறுதியளித்தபடி சட்ட அமுலாக்க நிறுவனங்களின் சுதந்திரத்தை நிறுவியுள்ளது. அதன்படி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் குழு கைது செய்யப்பட்டதாகவும், இது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இந்தோனேசிய பொலிஸார் நடத்திய 7 நாள் கூட்டு நடவடிக்கையின் விளைவாகும்.
குறித்த நடவடிக்கைக்கு இந்திய புலனாய்வு அமைப்புகள் ஆதரவு அளித்தது, அதற்கேற்ப திட்டம் செயல்படுத்தப்பட்டது, முடங்கிப் போயிருந்த புலனாய்வு அமைப்பின் சில பகுதிகள் இப்போது செயல்படுத்தப்பட்டுள்ளன.
பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அரசியல் தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், விரைவில் அது குறித்து அறிவிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
"சட்டத்திற்கு மேல் எதுவும் இல்லை. சட்டத்தின் முன் எங்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் பொருந்தாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். நாங்கள் அதை ஒரு நடைமுறையாக இந்த சமூகத்திற்கு கொண்டு வருகிறோம். யாரையும் சட்டத்திற்கு மேல் இருக்க நாங்கள் அனுமதிப்பதில்லை.
இதை நாங்கள் சமூகத்திற்கு வலியுறுத்துகிறோம். நாட்டிற்கு நீதி மற்றும் நியாயத்தை வழங்குவதே எங்கள் அரசியல் ஆர்வம். மேலும், சட்டத்தின் ஆட்சியை நிறுவி, சட்டம் அனைவருக்கும் சமம் என்ற செய்தியை சமூகத்திற்கு வழங்குவது.
இதை ஒரு தரப்படுத்தப்பட்ட சமூகமாக மாற்றுவதன் மூலம், நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். எனவே, வாக்குறுதியளித்தபடி, சமூகத்திற்கு ஒரு வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் வழங்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.
அந்த விடயங்களில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவது விசேட அம்சமாகும். இதுவரை, கிட்டத்தட்ட 75 பேருக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 20க்கும் மேற்பட்டோர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
எனவே, பாதாள உலக குழுவாக இருந்தாலும் சரி, அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, பொலிஸாராக இருந்தாலும் சரி, அதிகாரிகளாக இருந்தாலும் சரி, அனைவரும் சட்டத்திற்கு உட்பட்ட நாடாக மாற்றுவோம். அதிகாரத்தை பயன்படுத்தி சமூகத்தை வழிநடத்த நாங்கள் இடமளிக்க மாட்டோம்." என்றார்.

Post a Comment