Header Ads



மாத சொரூபத்தை உடைத்த, NPP யின் அமைப்பாளர் உள்ளிட்ட 8 பேர்


யாழ்ப்பாணத்தில் மது போதையில் மாத சொரூபத்தை அடித்து உடைத்து, தேவாலயத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் NPP கட்சியின்  தீவக அமைப்பாளர் உள்ளிட்ட 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


தேவாலயத்திற்கு அருகில் நேற்று (25) அரசியல் கட்சியின் தீவக அமைப்பாளரின் தலைமையில் சுமார் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று மது விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


சற்று நேரத்தில் நிறை போதையில் தேவாலயத்திற்கு சென்றவர்களுடன் முரண்பட்டு, அவர்களை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.


இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் ரூ. 50 இலட்சம் பெறுமதியான மாதா சிலையை அடித்து உடைத்து, தள்ளி விழுத்தியுள்ளனர். அத்துடன், தேவாலயத்தினுள் காணப்பட்ட ஏனைய பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்

No comments

Powered by Blogger.