சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் 2025 ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், சுற்றுலாப் பயணிகளுக்கு 14 நாட்கள் அல்லது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படும்.
மேலும், நாட்டில் நீண்ட காலம் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு 8 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும்

Post a Comment