விமானத்தில் அல்லாஹு அக்பர் என்று கத்திய, அபய் தேவதாஸ் நாயக் பிடிபட்டான்
பின்னர் உடமைகளை பரிசோதித்தபோது, நாயக்கிடம் இந்திய குடியுரிமை சான்று பெற்றிருப்பதைக் குறிக்கும் ஆவணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வெடிகுண்டுநபரின் பெயர் அபய் தேவதாஸ் நாயக் என்பதும், இந்தியர் என்பதும் பின்னர் தெரியவந்துள்ளது.
விமானி நடுவானில் அவசரநிலையை அறிவித்து, விமானத்தை விரைவாக தரையிறக்கினார். நாயக் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு, விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் காணப்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். சந்தேக நபர் எந்த ஆயுதங்களையும் தம்மோடு எடுத்துச் செல்லவில்லை என்பதையும் உறுதி படுத்தினர். மொத்தத்தில் இந்த அச்ச்சுறுத்தல் போலி என்று முடிவு செய்தனர்.
நேற்று திங்கட்கிழமை, (28) நாயக் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, அங்கு நாயக் மீது தாக்குதல் மற்றும் விமானத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
நாயக்கின் நோக்கங்கள் என்ன, ஏன் முஸ்லிம் போல நடித்து "அல்லாஹு அக்பர்" என்று கத்த வேண்டும் என்பது குறித்து எல்லாம் விசாரணை அதிகாரிகள் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. வழக்கு மறு விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பட்டுள்ளது.
(M. Ashik)

Post a Comment