Header Ads



ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு, ஜப்பானை தாக்கிய சுனாமி


ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வின் காரணமாக, ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியை சுனாமி தாக்கியுள்ளது.


அந்நாட்டு நேரப்படி, முற்பகல் 10.30 மணிக்கு சுனாமி தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


சுமார் 04 மீற்றர் உயரத்துக்கு அலைகள் மேலெழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை, ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி காரணமாக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


ஜப்பானின் டோகைடோ, ஜோபன் உள்ளிட்ட தொடருந்து மார்க்கத்தில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன

No comments

Powered by Blogger.