உலகின் நம்பிக்கையான தலைவராக மோடி முதலிடம், 8 ஆவது இடத்தில் ட்ரம்ப்
உலக தலைவர்களில் நம்பிக்கையான தலைவர் யார் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒவ்வொரு நாட்டு தலைவரும் எப்படி நடந்து கொள்கின்றனர் என்றும் ஆய்வு செய்யப்பட்டது.
இது குறித்து பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில் கூறும்போது, “100 கோடிக்கும் அதிகமான இந்தியர்களால் நேசிக்கப்பட்டு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் மதிக்கப்படும் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். மார்னிங் கன்சல்ட் நிறுவனத்தின் ஆய்வு முடிவில் அவர் மீண்டும் உலகின் நம்பிக்கையான தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். உலகளவில் மிக உயர்ந்த மதிப்பீடு பெற்ற மற்றும் மிகவும் நம்பகமான தலைவராக பிரதமர் மோடி உள்ளார். அவரது வலுவான தலைமையில் பாரதம் பாதுகாப்பான கைகளில் உள்ளது” என்று கூறியுள்ளார். இதைப் போல் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் உள்ளிட்ட தலைவர்களும் பிரதமர் மோடிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Post a Comment