Header Ads



பாப்பரசருக்கான இரங்கல் பதிவை நீக்கிய இஸ்ரேல், நெதன்யாகுவும் இதுவரை இரங்கலை தெரிவிக்கவில்லை


கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு பாப்பரசர் பிரான்சிஸ் மார்ச் 21 ஆம் திகதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் மரணத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், பல நாடுகளில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.


இந்நிலையில், இஸ்ரேலின் வெளியுறவுத் துறை, பாப்பரசர் பிரான்சிஸின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து தன் X வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதில், பாப்பரசர் பிரான்சிஸின் ஆன்மா சாந்தியடையட்டும். அவரது நினைவு ஒரு ஆசிர்வாதமாக இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் பதிவானது தற்போது நீக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு கத்தோலிக்க நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், தூதர்கள் மற்றும் இணையவாசிகள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.


பாப்பரசர் பிரான்சிஸின் மரணத்திற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதமர்கள் தங்களது இரங்கலைப் பதிவு செய்துள்ள நிலையில், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதுவரை இரங்கலை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.