Header Ads



"எனக்கும் இதுபற்றி சரியாக தெரியாது"


குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். 


பத்தரமுல்லை, பெலவத்தயில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (05) இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 


களனிப் பகுதியில் ஒரு காணி தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த குற்றச்சாட்டில் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். 


இதேவேளை, மேர்வின் சில்வாவின் மனைவி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 


"எனக்கும் இது பற்றி சரியாக தெரியாது. நேற்று இரவு வந்து 2015 தொடர்பில் ஒரு கதையைச் சொல்லி... இந்தக் கடைகளில் என்ன பிரச்சனை? என்று கேட்டு அழைத்துச் சென்றனர்."

No comments

Powered by Blogger.