ஆப்பிள் போனை வீசிவிட்டு, ஆடையின்றி சென்றவர் குறிப்பிட்டுள்ள விசயங்கள்
ஆடையின்றிய நிலையில், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தமைக்காக கைது செய்யப்பட்ட இளைஞர், தாம் சுதந்திரமாக வாழ விரும்புவதால் தனது ஆடைகளை கழற்றியதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தனது எப்பிள் போனை வழியில் வீசி எறிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
நேற்று அஹங்கமவில் உள்ள ஒரு விருந்தகம் ஒன்றில் இருந்து புறப்பட்ட அவர், பிதுருதலாகல மலைக்கு செல்ல விரும்பியதாக, விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளார்.
தாம் உந்துருளியில் செல்லும்போது, அவ்வப்போது ஆடைகளை கழற்றி எறிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது செயல்களுக்கு பொதுமக்களின் எதிர்வினையையும் கவனிக்க விரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு-கண்டி வீதியில் நிர்வாண நிலையில் உந்துருளியை செலுத்திச் சென்ற அஹங்கமவைச் சேர்ந்த 23 வயதுடைய, இந்த இளைஞரை கடுகன்னாவ பொலிஸார் கைது செய்தனர்.

Post a Comment