Header Ads



ஹோட்டலை திடீரென சுற்றிவளைத்த பொலிஸார் - பொலிஸ் அதிகாரி உட்பட 6 பேர் கைது


 மாத்தளை, மஹாவெல பகுதியிலுள்ள ஹோட்டலில் ஒன்றில் நடைபெற்ற பேஸ்புக் விருந்து பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.


இதன்போது பொலிஸ் அதிகாரி உட்பட 6 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று இரவு இந்தக் குழு கைது செய்யப்பட்டது.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரான பொலிஸ் அதிகாரி, பேஸ்புக் சமூக ஊடகங்கள் மூலம் இந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்தார் என்பது தெரியவந்துள்ளது.


கைது செய்யப்பட்ட அதிகாரி ஜயவர்தனபுர பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை முகாமில் இணைக்கப்பட்ட அதிகாரி என்றும், சிறப்பு மோட்டார் சைக்கிள் பிரிவில் பணியாற்றி வருவதாகவும் மஹாவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட மற்ற சந்தேக நபர்கள் 25 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த விருந்தில் நுழைய ஒரு நபரிடம் 3,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.


கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கஞ்சா, ஹாஷிஷ், மெத்தம்பேட்டமைன் மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். அவர்கள் இன்று நாவுல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.