240 டொலர்களை திருப்பிச் செலுத்தியதாக அமைச்சர் பெருமிதம்
சிறுவர்கள் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் வழங்கப்பட்ட மேலதிக பணத்தை அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் செலவிடாமல் திருப்பி வழங்கியுள்ளார்.
தனது வெளிநாட்டுப் பயணத்தின் பின்னர் ஏற்பட்ட கூடுதல் செலவுகளுக்காக வழங்கப்பட்ட பணத்தை இவ்வாறு ஒப்படைத்துள்ளார்.
அதற்கமைய அவர் 240 அமெரிக்க டொலர்களை அமைச்சின் பொருளாளரிடம் ஒப்படைத்துள்ளார். அது தொடர்பான ரசீது அதன் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 11 முதல் 16ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு 240 அமெரிக்க டொலர்களை மீதப்படுத்தியுள்ளார். இலங்கை நாணயத்தின் பெறுமதி அது 69,960 ரூபாவாகும்.
පෙබරවාරි 11 - 16 දක්වා ජීනීවා හි පැවති CEDAW සමුළුවට සහභාගිවීම සඳහා මා හට අමාත්යාංශය විසින් ලබාදුන් අතිරේක වියදම් සඳහා වන USD 240 ක ( දිනකට USD 40 × දින 6 ) මුදල වියදම් නොවුනු නිසා නැවත අමාත්යාංශය වෙත ලබාදී ගිණුම් ගතකර ලදුපතක් ලබා ගත්තෙමි.

Post a Comment