Header Ads



12 வீடுகள் எரிந்து நாசம்

 
ஹட்டன் - ஷெனன் தோட்டத்திற்கு சொந்தமான கே.எம். பிரிவில் உள்ள தொடர் குடியிருப்பு ஒன்றில் இரவு (03) தீப்பரபல் ஏற்பட்டுள்ளது. 


இந்த தீ விபத்தில் சுமார் 12 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


எனினும், இந்த தீ விபத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படாத நிலையில், மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. 


இந்த தீ விபத்தினால் தோட்ட தொழிலாளர்களின் பொருட்கள் மற்றும் உடமைகள் தீக்கிரையாகியுள்ளன. 


தீயை கட்டுப்படுத்த தோட்ட தொழிலாளர்களும், பகுதி மக்களும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.