Header Ads



12 கோடி ரூபாவு மதிப்புள்ள சிகரெட் தொகை கண்டுபிடிப்பு - அரசாங்கத்திற்கு 124,019,554 ரூபா இழப்பு

இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட, 12 கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள சிகரெட் தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள ஒரு கிடங்கில் இருந்து இந்த சிகரெட் தொகையை, சுங்க வருமான பணிக்குழு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.


இதன்போது, சுமார் 713,000 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


இந்த சிகரெட்டுகள் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து பாதுக்க பிரதேசத்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பு 124,019,554 ரூபாவாகும், இதனால் அரசாங்கத்திற்கு 107,985,621 ரூபா  இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் கூறியுள்ளது.


No comments

Powered by Blogger.