Header Ads



பக்தாத் நகருக்குள் படையெடுத்த மங்கோலியர்கள், என்ன அக்கிரமங்களை புரிந்தார்கள் தெரியுமா..?


1258 ஆம் ஆண்டில், இதுபோன்ற ஒரு தினத்தில்தான் மங்கோலியர்கள் பாக்தாத் நகருக்குள் படையெடுத்தனர். வரலாற்றில் மிகவும் கசப்பான பக்கமாக கருதப்படும் கொடூரமான அட்டூழியங்களையும் படுகொலைகளையும் அரங்கேற்றினர். எந்த அளவுக்கென்றால் வரலாற்றாசிரிய இப்னுல் அஸீர் அவர்கள், ஜெங்கிஸ்கான் என்ற பெயரைக்கூட பல ஆண்டுகள் உச்சரிக்க, எழுத மறுத்தார். 


மங்கோலியர்கள் பாக்தாத்தில் வசித்து வந்த 15 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களை கொடூரமாக கொன்றனர். டைகிரிஸ் நதி இரத்த ஆறாக பல நாட்கள் ஓடியது. பைதுல் ஹிக்மா எனப்படும் மாபெரும் நூல் களஞ்சியம் ஆற்றில் எறியப்பட்டது, ஆறெல்லம் மை கலந்ததால் நீல நிறமாக மாறியது. 


இதனை அடுத்து பல நூற்றண்டுகள் நீடித்த அப்பாஸிய பேரரசு முடிவுக்கு வந்தது. அபபாஸிய மன்னர்கள் 5 நூற்றாண்டுகளாக சேகரித்த விலைமதிக்க முடியாத கருவூலங்களை அவர்கள் கைப்பற்றினர். 


மங்கோலியர்கள் 25 நாடுகளை தொடர்ந்தும் ஆக்கிரமித்தனர், அங்கிருந்த கோடிக்கணக்கான மக்களைக் கொன்றனர். பின்னர் அவர்கள் வரலாற்றில் முதல் முறையாக பாலஸ்தீனத்தில் நடந்த யுத்தத்தில் தளபதி சைஃப் தீன் குதுஸ் படையால் தோற்கடிக்கப்பட்டனர்.


மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு, மங்கோலிய சந்ததியினர் பலர் இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்க ஆரம்பித்தனர். ஆனால்  அவர்களின் அட்டகாசங்கள், படையெடுப்புக்கள் தொடர்ந்தன. பின்னர் இந்திய நோக்கி படையெடுத்த அவர்கள் அங்கே முகலாய பேரரசை நிறுவினர். அங்கே அவர்களின் பேரரசு 3 நூற்றாண்டுகளாக தொடர்ந்து பிறகு வீழ்ந்தனர். தாஜ்மஹால் போன்ற  மாபெரும் கலாச்சார சின்னங்களை விட்டுச்சென்றனர்.


உலக வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட மங்கோலியா தேசம் இன்று வெறும் 3 மில்லியன் மக்களுடன் எதுவும் தெரியாத பச்சைக்குழந்தை போல அமைதியான நாடாக எப்படி மாறிவிட்டது, என்பதுதான் மிகவும் வியப்பான விடயம். 


✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.