உலக அமைதிக்கு டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தல் - எர்டோகன்
காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் முன்மொழிவு உட்பட, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உலகிற்கு விடுத்துள்ள "சவால்கள்" - உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
"உண்மையைச் சொல்வதானால், கடந்த காலத்தில் டிரம்பின் நடத்தை மற்றும் உலகின் பல நாடுகளுக்கு அவரது தற்போதைய அறிக்கைகள் மற்றும் சவால்கள் சரியாக இருப்பதாக நான் காணவில்லை, மேலும் இதை ஒரு நேர்மறையான வளர்ச்சியாக நான் பார்க்கவில்லை" என்று எர்டோகன் கூறினார்.
யூடியூபில் ஒளிபரப்பப்பட்ட இந்தோனேசிய தொலைக்காட்சி தொகுப்பாளர் நஜ்வா ஷிஹாப் உடனான நேர்காணலில் துருக்கிய ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

Post a Comment