ஈக்கள் இல்லாவிட்டால்...?
ஈக்களை அழிப்பதில் அதீத ஆர்வம் காட்டுவது மனித இயல்பு. ஈக்கள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சினம் என்பதும் உண்மைதான்.
சரி, நாங்கள் அதற்காக ஈக்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டினால் என்னவாகும்? அல்லது அவைகள் மண்ணிலிருந்து அழிந்து போனால் என்னவாகும்?
இக்கட்டுரையை நீங்கள் படித்துப் பாருங்கள்!
சிலசமயம் ஈக்களை முற்றிலும் அழிக்க வேண்டும் என்ற உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் மாற்றிக்கொள்வீர்கள்.
அதற்கு முன்னர் இந்த வான்மறை வசனத்தை உங்கள் ஞாபக திரைக்கு முன்னர் கொண்டுவருகின்றேன்:
((நிச்சியமாக நாம் யாவற்றையும் திட்டமிட்டுத்தான் படைத்திருக்கின்றோம்.))
📖 அல்குர்ஆன் : 54:49
ஈக்களை நம்மால் முற்றாக உலகிலிருந்து அழிக்க முடிந்தால் நடக்கப்போவது இவைகள்தான்!
முதல் கட்டமாக, சுமார் 11,000 வகையான தாவரங்கள் அழிந்துவிடும், கொக்கோ விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் சாக்லேட் இனி நமக்கு கிடைக்காது. ஏனெனில் ஈக்கள்தான் ஆண் தாவரத்திலிருந்து பெண் தாவரத்திற்கு மகரந்த சேர்க்கைக்கான விதைகளை பரிமாற்றம் செய்கின்றன.
அத்தோடு சுமார் 900 வகையான பறவைகள் மற்றும் விலங்குகள் குறிப்பாக பல்லிகள், தவளைகள் போன்றவைகள் அழிந்து போகும். பெரும்பாலும் அவைகளின் உணவுகள் ஈக்கள் மற்றும் அவைகள் மகரந்த சேர்க்கைக்கு துணையாக இருக்கும் தாவரங்களில்தான் தங்கியுள்ளன.
இந்தப் பறவைகள் மற்றும் தவளைகள், பல்லிகளின் அழிவானது அவைகள் இரையாக உட்கொள்ளும், தீங்கு விளைவிக்கக்கூடிய பூச்சிகளும் அதனால் ஏற்படும் ஆபத்துக்களும் அதிகரிக்கும். விளைவாக மனிதர்கள் உற்கொள்ளும் பெரும்பாலான விவசாய பயிர்களை அழிந்து போக வழிவகுக்கும்.
சரி, இப்போது ஈக்கள் மண்ணில் ஆற்றும் பிரதான பங்கு என்வென்று பார்போம். ஈக்கள் நமது சுற்றுச்சூழலை சுத்தமாக வைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஈக்களானது அழுகிய கரிமப் பொருட்களை, அழுகிய பிராணிகளின்உடல்களை, மற்றும் அனைத்து வகையான கழிவுகளையும் உற்கொள்வதால் சூழலை பராமரிப்பதில் அவைகளுக்கு விசேஷ பங்குண்டு.
ஒரு எடுத்துக்காட்டாக ஒரு ஈ சுமார் 600 முட்டைப்புழுக்களை கழிவுகளில் இடுகின்றது. அவைகள் ஒரு நாளைக்கு 0.5 கிராம் வீதம் கழிவுப் பொருட்களை உட்கொள்கின்றன. அதன் முலம் வருடத்தில் ஒரு வீட்டின் ஒரு குப்பைத் தொட்டியளவு கழிவுகளை உட்கொண்டு மீண்டும் மண்ணுக்கே அவைகள் உரமாக சேர்க்கின்றன.
ஈக்கள் கழிவுகளை கனிமங்களாக மாற்றும் பணி நடந்துகொண்டிருப்தால் மண்ணுக்கு வலம் சேர்க்கின்றது. தாவரங்களும் தானியங்களும் அவைகளை உறிஞ்சுவதால் உயிரினங்களுக்கு உணவு கிடைக்கின்றன. அதனூடாக வாழ்க்கை சுழற்சி தொடர வழிவகுக்கிறது.
இந்த ஈக்களின் செயற்பாடுகள் இல்லாமல் போகுமானால் பற்பல வைரஸ்கள் உருவாகி தொற்றுநோய்களின் பெருகும் தொட்டியாக உலகம் மாறிவிடாலாம்.
சுருக்கமாக சொல்வதென்றால் ஈக்களற்ற உலகத்தில் சுற்றுச்சூழல் மாசடையும். உணவுச் சங்கிலியில் பாரிய வீழ்ச்சி ஏற்படும். பிற்பாடு மனிதன் பசியாலும் நோயாலும் மண்ணிலிருந்து அழிந்து போக வழிவகுக்கும்.
✍ தமிழாக்கம் / imran farook

Post a Comment