Header Ads



யானைகளுடன் மோதிய ரயில், சாரதி குறித்து அதிர்ச்சித் தகவல்கள்


கல்ஓயா பகுதியில் விபத்து நடந்த நாளில் மீனகயா கடுகதி ரயிலை வயதான சாரதி ஒருவர் ஓட்டிச் சென்றதாகவும், அப்போது காட்டு யானைகள் கூட்டம் ரயிலில் மோதியதாகவும் வனவிலங்கு பாதுகாப்பு ஒன்றியம் தெரிவித்துள்ளது. 


சாரதி ரயிலை ஓட்டுவதற்கு பொது சேவை ஆணைக்குழுவின் பரிந்துரையைக் கூடப் பெறவில்லை என அதன் செயலாளர் நயனக ரன்வெல்ல குறிப்பிட்டுள்ளார். 


"இந்த ரயிலை 67 வயது சாரதி ஒருவர் ஓட்டியுள்ளதுடன், அவருக்கு பொது சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக் கூட இல்லை." 


அவரது பொருத்தமான பரிந்துரை காலம் ஜனவரி 15 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. 


ரயில்வே திணைக்களத்தில் இதுபோன்ற 19 ரயில் சாரதிகள் இருப்பதைக் காண்கிறோம். 


அந்த வயதான சாரதி தனது உயர் அதிகாரியின் வாய் வார்த்தையின் பேரில் இந்த ரயிலை இயக்கியுள்ளார். 


பிமல் ரத்நாயக்கவிற்கு இது பற்றி தெரியாது. “அவருக்கு இது தெரியாவிட்டால், உடனடியாகக் தேடி பார்க்கவும்” என்றார். 


கடந்த 20 ஆம் திகதி இரவு மீனகயா கடுகதி ரயிலில் மோதி ஏழு காட்டு யானைகள் உயிரிழந்ததை அடுத்து, இந்தப் பிரச்சினை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


காட்டு யானைகள் ரயில்களில் அடிபடுவதைத் தடுப்பதற்கான சிறந்த தீர்வை அதிகாரிகளால் இன்னும் வழங்க முடியவில்லை. 


ரயில்களில் யானைகள் மோதுவதைத் தடுக்க ஒரு தகவல் தொடர்பு அமைப்பின் அவசியம் உள்ளது என்று ரயில்வே மேம்பாட்டிற்கான தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் இந்திக தொடங்கொட சுட்டிக்காட்டியுள்ளார். 


"இப்போது கூட, அந்த சாதனங்கள் ரயில் என்ஜின்களில் பொருத்தப்பட்டுள்ளன, ஆனால் அவை செயற்படும் நிலையில் இல்லை." 


அது செயல்படுவதாக கூறி உரிய நிறுவனங்களுக்கு முழுப் பணமும் செலுத்தப்பட்டுள்ளது. 


மற்றொன்று, ரயில்களில் அதை நிறுவ போதுமான உபகரணங்களை வாங்கவில்லை. 


ஆனால் இந்த திட்டத்திற்கு 17 மில்லியன் டொலர்கள் செலவாகியுள்ளது. 


யானை-ரயில் மோதல் தொடர்பாக தகவல் தொடர்பு சாதனங்களின் தேவை மிகவும் அவசியமாக உள்ளது." என்றார்.

No comments

Powered by Blogger.