இத்தாலியில் திறமைகளை வெளிப்படுத்திய, இலங்கை முஸ்லிம் சிறார்கள் - ரிஸ்வி முப்தி சிறப்புரை (படங்கள்)
சுமார் 35 சிறார்கள் பங்கு பற்றிய இந் நிகழ்வு காலை 11:30 மணியளவில் ஆரம்பமானது.
ASH SHEIKH யாகுப் மாறே கிராஅத்துடன், SLMC இன் செயளாளர் நாளிர் நியாஸ் நிகழ்த்தினார். தொடர்சியாக சிறார்களின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் விஷேட அதீதியாக இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்ஹ் ரிஸ்வி முப்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேற்கத்தேய நாடுகளில் வசிப்பவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை மார்க்க ரீதியாக எவ்வாறு எதிர் கொள்வது, பிள்ளைகளின் எதிர்காலத்தை எவ்வாறு திட்டமிட்டுக் கொள்வது மற்றும் சமூக ஒற்றுமையின் முக்கியத்துவம் போன்ற தேவையுள்ள பல விடயங்களை ஆண்களுக்கு வேறாக பெண்களுக்கு வேறாக தனது சொற்பொழிவில் தெளிவாகவும் பல நடைமுறை உதாரணங்களோடும் எடுத்துரைத்தார்.
குறித்த நிகழ்வுக்கு ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பலர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் பங்குபற்றிய சிறுவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் இரண்டு வயது முதல் 17 வயது வரையான அணைத்து சிறார்களும் கலந்து கொண்டு தமது திறன்களை வெளிப்படுத்தியமை பெரு மகிழ்ச்சியளித்தது.
அத்தோடு இம்முறை ஒரு புது முயற்சியாக 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அல் குர்ஆனை பார்த்து ஓதும் போட்டி நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
SARONNO பள்ளி நிர்வாக செயலாளர் சகோ SAIFUDEEN மற்றும் விஷேட அதிகள் , நடுவர்கள் ASH SHEIH YAQUB MARE, ASH SHEIH USAMA SANTAVI ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
SLMC நிர்வாகத் தலைவர் Riyas Zawahir நன்றியுரையாற்றினார்.
சுமார் மாலை 6 : 00 மணி அளவில் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுற்றன.



Post a Comment