Header Ads



40 வைத்தியர்களுக்கு முஸ்லிம் சமய செயல்பாடுகள் தொடர்பான விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி


தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க அதன் மூலம் நடத்தப்படும் அரச மொழிகள் கல்வி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 40 வைத்தியர்களுக்கு முஸ்லிம் சமய செயல்பாடுகள் தொடர்பான  விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் மூலம் வெள்ளவத்தை ஜும்மா பள்ளிவாசலின் ஏற்பாடு மற்றும்  அனுசரணையில் நடைபெற்றது. 


இந் நிகழ்வை வெள்ளவத்தை பள்ளிவாசல் மற்றும் அதன் நிர்வாகிகள் குறுகிய காலத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


இந்நிகழ்ச்சியின் மூலம், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், முஸ்லிம் சமூதாயத்தின் பண்பாடுகள் மற்றும் மதப்பண்புகளின் ஆழமான புரிதலை உருவாக்க கவனம் செலுத்தியது.


இதில் வளவாளர்களாக வெள்ளைத்தை ஜும்மா பள்ளிவாசலின் வேண்டுகோளுக்கிணங்க நிதா பவுண்டேஷன் நிறுவனம் பங்கு கொண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தினார் 

No comments

Powered by Blogger.