துருக்கி மீது, தீவிரவாதத் தாக்குதல் - 4 பேர் உயிரிழப்பு. 14 பேர் காயம்
அங்காராவில் உள்ள துருக்கியின் விண்வெளித் தலைமையகத்தின் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது பலர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், தாக்குதல் நடந்த துருக்கிய ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ், துருக்கியின் மிக முக்கியமான பாதுகாப்பு மற்றும் விமான நிறுவனங்களில் ஒன்றாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு வேறு பணிகளுடன் நாட்டின் KAAN என்ற முதல் தேசிய போர் விமானமும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
தாக்குதல் நடத்தியவர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
மேலும், வெடிப்புகள் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, சில ஊடகங்கள் இந்த தாக்குதலுக்கு பல்வேறு காரணங்களை தெரிவிக்கின்ற நிலையில் உண்மைத் தகவல் இன்னும் வெளியாகவில்லை.
.webp)
Post a Comment