டலஸ் அணி, சஜித்துடன் இணைகிறது
சுதந்திர மக்கள் பேரவையின் மீதமுள்ள நான்கு உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவதற்கான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சுதந்திர மக்கள் பேரவையின் தலைவர் டலஸ் அழகப்பெருமவை ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட தலைவராக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், சரித ஹேரத்துக்கு குளியாபிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியும், லலித் எல்லாவலவிற்கு பாணந்துறை தொகுதி அமைப்பாளர் பதவியும், திலக் ராஜபக்சவுக்கு அம்பாறை இணை அமைப்பாளர் பதவியும் வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் குறித்த குழு ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளது. Tamilw

Post a Comment