JVP தலைமையகத்திற்கு சென்ற ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் அனுரகுமாரவுடன் சந்திப்பு
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ இன்று -13- பிற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து அவர்கள் கலந்துரையாடியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மனித உரிமைகளை நிலைநாட்டுதல், ஜனநாயகம், தேர்தல் ஒத்திவைப்பு மற்றும் சமீபத்தில் இயற்றப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதித் தலைவர் லார்ஸ் பிரெடல் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Post a Comment