சமூக வலைத்தளங்களில் நானும், நீயும், அவளும்...!
எமக்கு...!
வயதும் வேண்டாம்...! விலாசமும் வேண்டாம்...!
சமூக அந்தஸ்த்துகள், பட்டங்கள், பதவிகள்...!
சுய விவரங்கள் எதுவும் வேண்டாம்...!
எமக்கு வேண்டியதெல்லாம்...!
உன் பண்பாடு, உன் பணிவு...!
உன் சபை ஒழுக்கம்,
உன் நாகரீகமான உரையாடல்!
உன் வாய்மை, உன் நேர்மை...!
புண்படுத்தாத எழுத்துக்கள்...!
பதிவில் நம்பகத்தன்மை...!
தகவல்களில் உண்மைத்தன்மை...!
ஒருவர் மற்றவரை மதிக்கும் குணம்...!
கருத்தில் நாம் வேறுபாட்டாலும் மனிதாபிமானத்தில், மரியாதையிலும் ஒன்றுபடுவோம்...!
தோழர்களாக, நண்பர்களாக நாம் இருப்போம்...!
மேம்பட்ட இலத்திரனியல் குடும்பமாக நாம் இருப்போம்...!
முன்மாதிரி மிக்க மின்னணுக் கிராமத்தை நாம் கட்டியெழுப்புவோம்...!
மனதில் பட்டதெயெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை...!
எல்லாப் பதிவுகளையும் நிதர்சன வாழ்வோடு ஒப்பீடு செய்யவும் முடியாது ...!
வாழும் விதங்களை எல்லாம் பதிய வேண்டிய அவசியமில்லை...!
முடிவாக, நாம் மனிதர்கள்...!
ஒரு வாசகம் ஒரு நாள் முழுக்க நம்மை மகிழ்விக்கலாம்...!
இன்னொரு வாசகம் பல காலம் நம்மை நோவிக்கலாம்...!
தமிழாக்கம் / imran farook

Post a Comment