69 வயதுடைய பிக்கு, 46 வயது ஆண் மீது பாலியல் துஷ்பிரயோகம் - விகாரை குளத்தை பார்வையிடச் சென்றபோது அசிங்கம்
இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு வந்த ஆண் நபரை பிக்கு ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் லண்டனைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மிஹிந்தலையில் உள்ள விகாரை ஒன்றில் குளத்தை பார்வையிடச் சென்றவேளை இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மிஹிந்தலை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு ஹங்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 69 வயதுடையவர் எனவும் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. ibc

Post a Comment