தாய்ப்பால் வழங்க மதம் பார்க்காத இஸ்லாமியப் பெண்
குழந்தையைப் பெற்றவுடன், பெருந்தொற்று காரணமாக தாய் இறந்துவிடுகிறார். அதனால் பிறந்து ஒரு நாளேயான குழந்தைக்கு தாய்ப்பால் தர யாரேனும் முன்வாருங்கள் என, ட்விட்டரில் கோரிக்கை விடப்படுகிறது. இந்தக் கோரிக்கையைப் பார்த்து பேச்சற்றுப் போனேன்.
நான் வருகிறேன் என்று வருகிறார் ஒரு பெண். அவர் யார் தெரியுமா? சி.ஏ.ஏ போராட்டத்தின்போது, கர்ப்பிணியென்றும் பாராமல் ஜாமியா பல்கலைக்கழகத்தில் பயின்ற சஃபூராவை சிறையில் அடைத்ததில்லையா இந்தக் கொடுங்கோல் அரசு. அவரே தான்!
தாய்ப்பால் தர அவர் மதம் பார்க்கவில்லை. ஆனால் இந்தத் தேசம் அவருக்கு இஸ்லாமியர் என்கிற ஒரே காரணத்துக்காக சிறைவாசத்தை தந்தது. அவர் இத்தேசத்திற்கு எதைத் திருப்பித் தருகிறார் பாருங்கள்.
Via Samanilai Samudhayam
Safoora Zargar

Post a Comment