Header Ads



அமைச்சர் ஹலீமின் கவனத்திற்கு..!

-JM.Hafeez-

கண்டி மாவட்டத்திலுள்ள உடதலவின்ன உப தபால் நிலையத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளை தபால்துறை முஸ்லிம் சமய விவகார அமைச்சு எடுக்க வேண்டும என பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இது பற்றி பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கையில்-

கடந்த 75 வருடகாலமாக மேற்படி உபதபாலகம் இயங்கி வந்நததாகவும் சிலமாதங்களுக்கு முன் அதில் கடமையாற்றி போஸ்மாஸ்ட்டர் ஓய்வு பெற்றதை அடுத்து கட்டுகாஸ்தோட்டை அல்லது பொல்கொல்லையில் இருந்தே தற்காலிகமாக ஒருவர் வந்து போனதாகவும் தற்போது அவ்வாறு சேவையில் ஈடுபட யாரும் இல்லாதகாரணத்தால் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்தாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் ஓய்வூதியம் பெறுவோரும், சகாய நிதிகள் பெறுவோரும் ஏனை பல்வேறு தேவைகளுக்கா தபாலகம் செல்ல வேண்டியவர்களும் பொல்கொல்லை வரை செல்லவேண்டியுள்ளதாகக் கூறுகின்றனர்.ஓய்வுதியம் பெறும் பெருந்தொகையான  வயது முதிர்ந்தவர்கள் உடதலவின்னையில் வசிப்பதாகவும் இவர்கள் இதனால் பாரிய சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிய வருகிறது.

இது விடயமாக தொடாபுடையவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆர்பாட்டங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடாபாகப் பலர் கருத்து வெளியிட்டனர். 

No comments

Powered by Blogger.