Header Ads



உடலில் நெருப்பு தீப்பற்றியவர் வபாத் - யாழ்ப்பாணத்தில் சம்பவம்

-பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாணம் சோனகதெரு பகுதியில் வசிக்கும் 2 பிள்ளைகளின் தாயொருவர் தவறுதலாக உடலில் நெருப்பு தீப்பற்றி எரிந்து 4 நாட்களாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

யாழ். சோனகர் தெருவில் வசிக்கும் 2 பிள்ளைகளின் தாயான முகமட் சப்ரா பஷிலா (வயது 32) என்பவரே உயிரிழந்தவராவார்.

கடந்த 13 ஆம் திகதி அதிகாலை 12.30 மணியளவில் பிள்ளைக்கு பால் வைத்துக் கொடுப்பதற்காக அடுப்பில் பாலை வைத்துள்ளார். பின்னர் கொதித்த பாலை அடுப்பில் இருந்து இறக்குவதற்காக அவர் அணிந்தரு ந்த தாவணியால் பிடித்த வேளை போது நெருப்பு தாவணியில் பட்டு உடல் முழுவதும் பற்றிக் கொண்டது.

ஓடிச்சென்று அருகில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் வீழ்ந்த அவரை மீட்ட கணவர் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்

எனினும் 4 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

No comments

Powered by Blogger.