Header Ads



டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற கூட்டத்திலிருந்து, இஸ்லாமிய பெண் வெளியேற்றம்


அமெரிக்காவில்  அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற கூட்டத்தில் இருந்து இஸ்லாமிய பெண் வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்கா அதிபருக்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது.

ஹிலாரி கிளிண்டன், டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்டவர்கள் அதிபர் பதவியை கைப்பற்றுவதற்காக தீவிர பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவில் உள்ள சிரியா மற்றும் வேறு நாட்டு அகதிகளை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.

மேலும் தான் அதிபரானால் அகதிகள் அவர்களின் சொந்த நாட்டுகே திரும்பி  செல்லும் நிலை ஏற்படும் என்றும் கூறிவருகிறார்.

இந்நிலையில் தெற்கு காரொலினா உள்ள ராக் ஹில்லில் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

அதில் ரோஸ் ஹமித் என்ற இஸ்லாமிய பெண்மணியும் கலந்துகொண்டார். டொனால்ட் ட்ரம்ப் பேசும் போது அகதிகள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவில் உள்ள சிரியா அகதிகளுக்கும் ஐ.எஸ். அமைப்பினருக்கும் தொடர்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஹமித் அமைதியான முறையில்  எழுந்து நின்றுள்ளார்.

இதையடுத்து பாதுகாப்புஅதிகாரிகள்  அவரை உடனடியாக வெளியேற்றினர்.

மேலும் அங்கிருந்த மக்களும் அவர் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி கூச்சலிட்டனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


No comments

Powered by Blogger.