கலாபூசனம் ஏ.பி. தாவூத் காலமானர்
(எம்.எம்.ஏ.ஸமட்)
உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவின் இணைப்புச் செயலாளரும் முன்னாள் அக்கரைப்பற்று பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவருமான கலாபூசனம் ஏ.பி. தாவூத் இன்று காலை கொழும்பு தேசிய வைத்திய சாலையில் காலமானர். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜுயூன்.
ஓய்வு பெற்ற காணி உத்தியோகத்தர் மர்ஹும் தாவூத் பிரபல எழுத்தாளரும் கவிஞரும் சிறந்த விமர்சகருமாவார். அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேற்றமடைய வேண்டுமென பிரார்த்திப்போமாக!
..............................................
மர்ஹும் ஏ.பி. தாவூத் மக்களின் மனங்களை வென்றவர்
இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டதரணி ஆரிப் சம்சுடீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவின் இணைப்புச் செயலாளர் ஏ.பி. தாவூத் இன்று காலை கொழும்பில் காலமானார்
அன்னாரின் மறைவு தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
மர்ஹும் தாவூத்தின் இழப்பானது தேசிய காங்கிரஸுக்கு இடு செய்ய முடியாத வெற்றிடமாகும். மரணம் எல்லோரையும் வந்தடையும். அந்தவகையில் சிறந்த கலைஞரும் எழுத்தாளரும் பேச்சாளரும் நிர்வாக உத்தியோகத்தருமான தேச கீர்த்தி, கலாபூசனம் தாவூத் நம்மை விட்டும் இன்று பிரிந்து விட்டார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜுயூன்.
அவர் மரணிக்கும் வரையிலும் வயதிலும் அனுபவத்திலும் உயர்ந்திருந்தாலும் சிறுபிள்ளை முதல் பெரியோர் வரை எல்லோரிடமும் சகஜமாக பேசும் பண்புள்ளம் கொண்டவராக திகழ்ந்தார். என்றும் புன்முறுவலுடன் எல்லோரையும் அனைத்துச் செல்லும் நன்பண்பு அவரிடம் காணப்பட்டது.
உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சில் அவர் அமைச்சர் அதாவுல்லாவின் இணைப்புச் செயலாளராக கடமை புரிந்த இறுதி நாட்கள் வரை இன, மத, பிரதேச வேறுபாடின்டி அமைச்சுக்கு வரும் அனைவரதும் தேவைகளை முடிந்தளவு தனது நிர்வாக அனுபவத்தின் மூலம் நிறைவேற்றி வைத்தவர்.
மனிதன் வாழும் போது நற்பண்புகளுடன் வாழ வேண்டுமென்பதற்கு ஓர் உதாரணமாக வாழ்ந்து மறைந்துவிட்ட மர்ஹும் ஏ.பி. தாஹுத்தின் பாவங்களை இறைவன் மன்னித்து நற்கருமங்களை ஏற்று மறு உலக வாழ்கை சுபிட்சமானா வாழ்வாக வல்ல அல்லாஹ் வழங்க வேண்டுமென பிரார்த்திப்பதோடு அன்னாரின் மறைவுத் துயரால் ஆழ்ந்திருக்கும் குடுப்பத்தினரின் துயரங்களில் பங்கெடுத்துக்கொள்வதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் விடுத்துள்ள அனுதாவச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment