Header Ads



கூட்ட மண்டபமும், சுற்றுலா விடுதியும் முசலி பிராந்தியத்தில் அமைக்கப்பட வேண்டும்

(முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்)

மன்னார் முசலிப்பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் 30ற்கு அதிகமான கிராமங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள முசலிப் பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ளது.இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ,ஒருவர் ஹுனைஸ் பாரூக் ,மற்றையவர் முத்தலிபா பாரூக் ,அமைச்சர் றிசாத் பதியுதீனும் பிரதேச அபிவிருத்தி விடயத்தில்  அதிக அக்கறை காட்டுபவர்.

1990 இடப் பெயர்வால் இங்குள்ள அனைத்துக் கட்டிடங்களும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. தற்போது மெல்ல மெல்ல மக்கள் அங்கு குடியேறிக் கொண்டுள்ளனர். உட்கட்டமைப்பு வேலைகளும் படிப்படையாக நடைபெற்று வருகின்றன. இப்பிரதேசத்தில் கலாசார விழக்கள், பொதுக்கூட்டங்கள் ,பரிசளிப்பு விழாக்கள் திருமணம்,கருத்தரங்குகள் என்பவற்றை நடாத்துவதற்குப் பொருத்தமான கூட்டமண்டபங்கள் இல்லாமல் இருப்பது ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளது .பொருத்தமான ஒரு மண்டபத்தை அமைத்து அதனை முசலிப்பிரதேச சபையினிடம் ஒப்படைத்தால் பிரதேச சபைக்கும் வருமானத்தைத் தரும் வாய்ப்பு உள்ளது.

இதே போன்று அமைச்சர்கள் ,உயர் அதிகாரிகள் ,வெளிநாட்டுப் பிரதிநிதிகள் போன்றோர் வருகை தந்தால் அவர்கள் ஓய்வு எடுப்பதற்கும் ,தங்குவதற்கும் பொருத்தமான சுற்றுலா விடுதிகள் இல்லாமல் இருப்பதும் ஒரு குறைபாடாக உள்ளது. அல்லி ராணிக்கோட்டை இருக்கின்ற பிரதேசத்திற்கு அண்மையில் சுற்றுலா விடுதிகள் அமைத்தால் சிறப்பாக இருக்கும் ,கூட்ட மண்டபத்தையும் ,சுற்றுலா விடுதியையும் ,அமைக்க அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களும் ,பாராளுமன்ற உறுப்பினர்களான ,ஹுனைஸ் பாரூக் அவர்களும்,முத்தலிபா பாரூக் அவர்களும், மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களும் முசலிப்பிரதேச சபைத்தலைவர் தேசமான்ய அ.வ.எஹியான் பாய் அவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர் பார்க்கின்றனர்.              

No comments

Powered by Blogger.