'பைஸர் முஸ்தபா பவுண்டேஷன்' ஏற்பாட்டில் இலவச ஆங்கில மொழிகற்கை (படங்கள் இணைப்பு)
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த பௌத்த , இந்து முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ தர்ம பாடசாலைகளில் கல்வி பயிலும் சுமார் 1,500 மாணவர்களுக்கான இலவச ஆங்கில மொழிகற்கை நிகழ்ச்சித் திட்டம், கொழும்பு மியூஸியஸ் கல்லூரியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த இலவச ஆங்கில பயிற்சித்திட்டத்தை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
ஸ்ரீ.ல.சு.க. மத்திய கொழும்பு அமைப்பாளரும், முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சருமான 'ஜனாதிபதி சட்டத்தரணி' பைஸர் முஸ்தபாவின் சிந்தனையில் உருவான இந்த ஆங்கில மொழி நிகழ்ச்சித் திட்டத்தை, பைஸர் முஸ்தபா மன்றம்,'லங்கா ஐ ஓ. சி. நிறுவனத்துடன் இணைந்து ஒழுங்கு செய்துள்ளது
ஸ்ரீ ஜயவர்த்தன பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் பெல்லன்வில விஜமலரத்ன தேரர் , முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.அஸ்வர், துமிந்த சில்வா உட்பட பிரமுகர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
மாணவர்கள் இந்த பயிற்சி நெறியை மேற்கொள்வதற்குத் தேவையான உபகரணங்களும் இந்த நிகழ்வின் போது ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன.
கொழும்பு மாவட்டத்தில் இயங்கும் 15 ஞாயிறு சமயப் படசாலைகளில் இருந்து 12 வயதிற்கும் 18 வயதிற்கும் இடைப்பட்ட மாணவர்கள், மேற்படி நிகழ்ச்சித் திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பைஸர் முஸ்தபா பவுண்டேஷன் ஏற்பாட்டில் இடம்பெறும் இத்திட்டம் சுமார் 6 மாத கால பாட நெறியைக் கொண்டது. பேச்சு, இலக்கணம், எழுத்து, செவிமடுத்தல் ஆகிய 4அம்சங்களைக் கொண்டதாக இந்நிகழ்ச்சித் திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது .




Post a Comment