புதிய முதலமைச்சர்கள் நாளை பதவியேற்கிறார்கள்..!
மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கான பதவிப்பிமாணம் நாளை முற்பகல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் பங்குகொள்வதற்காக சென்றிருந்த நிலையில், இந்த பதவிப்பிரமாணம் தாமதமானது.
இந்த நிலையில், இன்று அதிகாலை ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் மத்தல சர்வதேச வானூர்தி நிலையத்தில் வந்திறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அடுத்து நாளைய தினம் பதவிப்பிரமாணம் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

Post a Comment