களுத்துறை மாவட்டத்தில் 110 தமிழ்மொழி முலமான பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம்
(அ.ஏ சமத்)
மேல்மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்திற்காக 110 தமிழ்மொழி முலமான பட்டதாரி ஆசிரியர்களுக்காக நியமனம் வழங்கப்பட்டது. மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானாவின் விசேட நடவடிக்கையின் பேரில் இந் நியமணம் வழங்கப்பட்டது.
நியமனம் வழங்கும் நிகழ்வு கெவலக் டவுனில் உள்ள மேல் மாகாண ஆளுனர் அலவிமௌலானாவின் அலுவலகத்தில் மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன றனதுங்க தலைமையில் நடைபெற்றது.
கட்டாயமாக 5 வருடம் களுத்துறை மாவட்டத்தில் உள்ள தமிழ்மொழி முலமான பாடசாலைகளில் கடமையாற்ற வேண்டும். இப் பட்டதாரிகள் கம்பஹா கொழும்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந் நியமனம் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபாகனேஸ், மேல்மாகணசபை உறுப்பினர் அம்ஜத், அர்சாத், நௌசர் பௌசி, பாயிஸ், ராம் ஜனாதிபதியின் மத்திய கிழக்கு நாடுகளின் ஆலோசகர் மசூர் மௌலானா மற்றும் மேல்மாண கல்வியமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Post a Comment