Header Ads



அபே ஹாமுதுருவனே..!

(ஏப்ரல் 24 ஆம் திகதி வெளியாகியுள்ள மௌபிம பத்திரிகையின் ஆசிரிய தலையங்கமே இது. ''தம்புள்ளை முஸ்லிம் பள்ளிவாசல் தொடர்பான பிரச்சனை சமய அடிப்படையில் தீர்த்துக்கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சியை தடுக்க முடியாவிடின் நாளை அதற்காக கிடைக்கும் பதிலும் சமய அடிப்படையில் கிடைக்கும் என்பதுதவிர்க்க முடியாததாகும். அதற்கு மகா சங்கத்தினரும் பௌத்த மக்களும் இடமளிக்க கூடாது'' என்ற வரிகளை சிலமுறை வாசியுங்கள் யதார்த்தம் புரியும்)

உதவி - என்.எம். அமீன்

சியம் மஹாமஹாநாயக்க பதவி வகிக்கும் நீங்கள் உட்பட மகா சங்கத்தினர் புத்த தர்மத்தின் வளர்ச்சிக்காக செய்துள்ள அளப்பரியபணி பற்றி இந்த நாட்டின் பௌத்த மக்களுக்குள் எவ்வித சந்தேகமும் இருக்க இடமில்லை
என்றே நாங்கள் கருதுகிறோம்.

உங்களை இந்நாட்டு மக்கள் இனாமலுவே ஹாமதுருவோ என்றே அழைக்கிறார்கள். ஆயிரக்கணக்கான வருடங்களில் இருந்து இந்த நாட்டை எதிர்நோக்கிய ஆபத்துக்கள், அனர்த்தங்களின் போது முன்னணியில் செயற்பட்டவர்கள் இந்த நாட்டின் பௌத்த தேரர்கள் ஆவார்கள். உயிர்களைக் கூட அர்ப்பணம் செய்து நாட்டையும், மக்களையும் சமயத்தையும் பாதுகாப்பதற்கு அர்ப்பணத்தோடு செயற்பட்ட பிக்குகளின் பரம்பரையில் தற்கால ஒருவராக இனாமலுருவை தேரோவை இந்த நாட்டின் சிங்கள பௌத்த மக்கள் சதா நினைவு கூருகிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அது நீங்கள் முன்னணியில் இருந்து பேசிய செயற்பட்ட சிங்கள பௌத்தர்களது நன்மைக்காக அமைந்திருந்தமை ஆகும்.

எனினும் எங்கள் தேரோ அவர்களே காவி உடைக்கு பௌத்தர்கள் மத்தியில் இருக்கும் பக்தி பூர்வமான மரியாதை ஒருதுளி கூட குறையாதிருக்கும் அதே நேரம், சில சமயங்களில் அந்த காவியுடையில் மறைந்து கொண்டு செய்யும், சொல்லும் அனைத்துக்கும், ஆமாம் சரி, ஹாமதுருவனே என்று சொல்லுவதற்கு இந்த நாட்டின் பௌத்தர்களால் முடியும் என்று எண்ணிப்
பார்க்கக் கூட எம்மால் முடியாதிருக்கின்றது.

தற்போது சில பிக்குமார்களின் செயற்பாடு புத்தபெருமானார் போதித்த போதனைகளுக்கு புறம்பான நடவடிக்கை என்பது தெளிவாக தென்படுகிறது என்பதை மகா நாயக்க தேரர் என்றவகையில் நீங்கள் உங்களுக்கு தெரியாது என்று சொன்னால் அது நாம் செய்யும் தவறாகும் எனவே உங்களுடன் இந்தப் பிரச்சினை பற்றி பேசுவதற்கு நாங்கள் அச்சப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் கருதுகிறோம்.

சகலதும் நிச்சயமற்றது என்று புத்த பெருமானார் போதித்திருப்பது இந்த நாட்டைப் பொறுத்தவரையிலும் உண்மையாகும். முன்னைய காலத்தில் பொய்யாகும். முன்னைய காலத்தில் இந்த நாடு சிங்களவர்களது நாடாக இருந்தது. பௌத்தர்களது நாடாக இருந்தது. அது இன்றும் உண்மை என்று புத்த பெருமானாரின் போதனையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் ஏற்றுக்கொண்டாலும் உண்மையை இருக்கின்ற விதத்தில் எடுத்துக் கொண்டால் சிங்களவர்களது நாடு என்றோ பௌத்தர்களது நாடு என்றோ ஒன்று இன்று யதார்த்த பூர்வமாக இல்லை. இந்த நாடு பல இன, பல மத நாடு என்பது யதார்த்தமாகும்.

சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே, பறங்கியர் ஆகிய பிரதான இனங்களோடு ஆதிவாசிகள் உட்பட 20 சிறு இனக்குழுக்களுக்கும் மேற்பட்ட தாயகமாகக் கொண்டு ஆயிரக்கணக்கான வருடங்கள் வாழ்ந்து வருகின்றார்கள். மத மற்றும் நம்பிக்கையாளர்களும் இந்த நாட்டில் பெருந்தொகையினர். எனினும்
முக்கிய விடயம் என்னவென்றால் ஆயிரக்கணக்கான வரலாற்று முழுவதிலும் மிகச் சிறிய காலத்தைத் தவிர இவர்கள் எல்லோரும் மிகச்சிறிய காலத்தைத் தவிர ஒருவரோடொருவர் தமது தனித்துவத்தை பேணி சௌஜன்னியத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் மத்தியிலே மோதல்கள் உருவாகியிருந்தால் அது தீவிரவாத ஆட்சியாளர்களினால் பலவந்தமாக சுமத்தப்பட்ட நிலைமையிலாகும். மற்றவர்களுடன் சௌஜன்யத்துடன் வாழ்வது குறித்து கூடுதலான தாக்கம் ஏற்பட்ட சிங்கள பௌத்த கலாச்சாரத்தினால் என்று சொல்வதில் தவறில்லை.

குறிப்பாக பௌத்தர்கள் என்பது மற்றவர்களுடைய குரலுக்கு செவிமடுக்கின்ற, மற்றவர்களது கருத்துக்களை பொறுத்துக்கொள்கின்ற, மற்றவர்களை பாதிக்காத வாழ்க்கை சித்தார்த்தத்தை கொண்டவர்கள் என்பதற்கு காரணமாகும். கண், தலை இறைச்சி, இரத்தம், தானம் செய்தோ தம்முடைய சமயத்துக்காக தோன்றும் பௌத்தர்கள் சமயத்தின் பெயரால் மற்றவர்களது கண், தலை இறைச்சி, இரத்தத்தை பறிப்பதில்லை. புத்த தர்மம் குறித்து மற்றவர்களது மனதிலே தெளிவு ஏற்பட்டிருந்தால் அது பௌத்தர்களின் பௌத்த தன்மையினால் அன்றி பலவந்தமாக மற்றவர்களது மேல் சமயத்தை திணிப்பதன் மூலம் அல்லது மற்றவர்களது சமயங்களை தாக்கி அடித்து நாசப்படுத்தி அல்ல. எனினும் பௌத்தர்களை அந்த பிரயாணவழிக்கு தள்ளிவிடும் இயக்கம் செயற்படுவதாக இருந்தால் அந்த பௌத்த கலாச்சாரத்தின் மூலம் கட்டியெழுப்பட்டிருக்கின்ற நல்லிணக்கம் தமது இருப்புக்கு பாதிப்பாக அமையும் என்று சிந்திப்பதாகும். அவ்வாறு இல்லாவிடில் அந்த சமூக நல்லிணக்கத்தை தகர்த்தெறிந்து சமூக பகைமையை தமது இருப்புக்காக பயன்படுத்துவதற்கு சிந்திப்பதனபால் ஆகும்.

எனவே, சிக்கலாக்கப்பட்ட இன யுத்தத்தின் மூலம் நாம் செலுத்திய நஷ்டத்தை இன்னும் இந்நாட்டால் ஈடுசெய்ய முடியாது இருப்பதே அதற்கு காரணமாகும். எங்களுக்கு மேலும் யுத்தம் தேவையில்லை. சமய யுத்தங்கள் தேவையில்லை எங்களுக்கு தேவைப்படுவது தனித்துவ அடிப்படையில் கூறப்படுவதல்ல தனித்துவத்திற்கு இடையே நல்லெண்ணத்தை பலப்படுத்துவதாகும்.

இனாமலுவே தேரரிடம் நாம் மிகப் பணிவாக கேட்பது அதற்காக முன்னுக்கு வருமாறாகும். இப்போது சிங்கள பௌத்த அடிப்படை அரசாங்கம் என உலகெங்கிலும் செய்யப்படுகின்ற பிரசாரத்தின் அபகீர்த்தியை தடுக்கமுடியுமாவது உங்களது சாதகமான தலையீட்டினால் மட்டுமாகும்.

No comments

Powered by Blogger.