குழந்தை வரம் வேண்டி 5000 ஆட்டுக் குட்டிகளை பலியிட்டும் இரத்தம் குடித்த பெண்கள்
ஈரோடு - அந்தியூர் அருகே உள்ள பூசரையூரில் உள்ள கோவிலில் நடந்த திருவிழாவில் 5000 ஆட்டு குட்டிகள் பலி கொடுக்கப்பட்டன.
இங்குள்ள கோவிலில் உள்ள செம்முன்ன சாமி எனும் கடவுளுக்கு காணிக்கை செலுத்துவதற்காக 5000 இளம் ஆட்டு குட்டிகள் பலி கொடுக்கப்பட்டன. பலி கொடுக்கப்பட்ட ஆட்டு குட்டிகளின் ரத்தத்தை பூசாரிகளும் பக்தர்களும் குடித்தனர். குழந்தையில்லா பெண்களும் குழந்தை பேற்றுக்காக ஆட்டு ரத்தம் குடித்தனர்.
நேற்று சித்திரை 17 செம்முன்ன சாமிக்கு ராசியான நாள் என்பதால் நேற்று 5000 ஆடுகள் பலி கொடுக்கப்பட்டது. ரத்தத்தோடு ஆட்டு கறியும் இலவசமாக விநியோகிக்கப்பட்டது. ஆட்டு கறியை சாப்பிட்டால் தீராத வியாதிகள் தீரும் என்று அப்பகுதி மக்கள் நம்புவதால் அக்கறியை அனைவரும் ஆர்வமாய் வாங்கி சென்றனர். ஏற்கனவே கோவிலில் பலி கொடுக்க விதிக்கப்பட்ட தடை பின் மக்களின் எதிர்ப்பால் வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. (inneram)

இதை இமெல்டா சுகுமாருக்கு அறிவித்திருந்தால் தடை உத்தரவு வாங்கி கொடுத்திருப்பாவே 5000 ஆட்டுக்குட்டிகள் இல்லையா ?
ReplyDeleteஉங்க அம்மா மட்டும் அம்மா ,எங்க அம்மா என்ன சும்மாவா ?
ஐயா, இமெல்டா சுகுமார் போன்ற அறிவாளிகளுக்கு பசுதான் தாய்,ஆடு அல்ல... அதாவது கோமாதா.
ReplyDeleteஅவர்களை போன்ற அறிவுள்ள பிள்ளைகளை மாட்டைத் தவிர (கோமாதா) வேறு யார்தான்
ஈன்றெடுக்க முடியும்?
மாடு பெற்ற பிள்ளைகள் ஆட்டையோ, மனிதனையோ பற்றி அதிகம் கவலைப் படப் போவதில்லை.
மாட்டுக்கு (மிருகங்களுக்கு ) மனிதபிள்ளை பிறப்பது வேத இதிகாசம்களில்தான். கோமாதா பெத்தபிள்ள இமெல்டா ஏன் முல்லைதீவுல இருந்து யாழுக்கு மாற்றப்பட்ட கதை அய்யாவுக்கு தெரிய நியாயமில்லைதான் . (முஸ்லிகளுக்கு எதிரான விஷகருத்துக்கள் காரணம் என்பது தனிவிடயம்)
ReplyDeleteமாட்டுக்கறி தின்கிற வீரசைவர்களை பற்றி அய்யா அறியவில்லை போலும், மேலும் ரிக் ,யசுர் ,சாமு,அதர்வண போன்ற வேதங்களில் புரட்டிப் பார்த்தால் மாடுகளையும் தாண்டி மிருகங்களை சாப்பிட அனுமதி உள்ளதை பார்க்கலாம் .
நியாயவான்களின் படிக்கு நியாயங்களை நியான்களின்படிக்கு நியாயம் தீர்க்கப்பட வேண்டும். நன்றி அய்யா