Header Ads



நடுவீதியில் தொழுகை, நடாத்திய முஸ்லிம்கள் - சீறுகிறது சிங்கள ராவய


- விடிவெள்ளி ARA.Fareel-

முஸ்லிம்கள் நாட்டின் சட்­டங்­களை மீறி ஏனைய சமூ­கத்­தி­னரை சிர­மங்­க­ளுக்­குள்­ளாக்கி தமது சமயக் கட­மை­களை நிறை­வேற்­று­வதை ஒரு போதும் அனு­ம­திக்க முடி­யாது என சிங்கள ராவய தெரிவித்துள்ளது. 

தமிழ் சிங்­கள புத்­தாண்டுக்கு மறுநாளான வெள்ளிக்கிழமை நுவ­ரெ­லியா – கொழும்பு பிர­தான வீதியில் 4 ஓடு­பா­தை­களை மறைத்து முஸ்லிம்கள் தமது சமயக் கட­மை­களை நிறை­வேற்­றி­னார்கள்.

இதனால் தமிழ், சிங்­கள மக்கள் அசௌ­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளா­னார்கள் என சிங்­கள ராவய அமைப்பின் செய­லாளர் மாகல்­கந்தே சுதத்­த­தேரர் தெரி­வித்தார்.

நேற்று -19- மதியம் கிரு­லப்­ப­னை­யி­லுள்ள பௌத்த மத்­திய விகா­ரையில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது, 

முஸ்லிம்கள் தாம் நினைத்­த­வாறு ஏனைய மக்­களை அசௌ­க­ரி­யப்­ப­டுத்தி சம­யக்­க­ட­மை­களை முன்­னெ­டுத்­தமை வெறுக்­கத்­தக்க செய­லாகும். பொலி­ஸாரும் இவர்­க­ளுக்­கெ­தி­ராக எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை. அவர்கள் ஒளிந்து கொண்­டார்கள்.

அடுத்த வருடம் தமிழ் சிங்­கள புத்­தாண்டு தினத்தில் நாங்­களும் நுவ­ரெ­லி­யா­வுக்குச் செல்வோம். நாமும் பிர­தான வீதியின் நடுவே சமய வழி­பா­டு­களைச் செய்வோம். நுவ­ரெ­லிய நகரின் மத்­தி­யிலே எமது சமய வழி­பா­டுகள் நடாத்­தப்­படும்.

பௌத்­தர்கள் நாம் பாதை நடுவில் பிரித் ஓது­கி­றோமா? முஸ்­லிம்­களின் இவ்­வா­றான செயல்கள் கார­ண­மா­கவே மோதல்கள் உரு­வா­கின்­றன. நாம் எந்தச் சவால்­க­ளுக்கும் தயா­ரா­கவே இருக்­கிறோம். 

முஸ்­லிம்கள் நுவ­ரெ­லி­யாவில் பாதை மத்­தியில் மேற்­கொண்ட சமய நட­வ­டிக்­கை­களை இந்த வரு­டத்­துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்­லையேல் நிலைமை மோச­மாகி விடும்.

பொது­வான பாதையில் ஏதும் நிகழ்­வு­கள் மேற்­கொள்ள வேண்­டு­மென்றால் 6 மணித்­தி­யா­ல­ங்­க­ளுக்கு முன்பே அது­பற்றி குறித்த பிர­தேச பொலிஸ் நிலை­யத்­துக்கு அறி­விக்­கப்­பட வேண்டும். 

பொலி­ஸி­ட­மி­ருந்து அனு­ம­தியும் பெற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும். இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டா­மலே நடு வீதியில் முஸ்­லிம்கள் சமய கட­மை­களை மேற்­கொண்­டனர். 

முஸ்­லிம்கள் தமது சமய வழிபாடுகளை பள்ளிவாசல்களுக்குள்ளேயே நடத்திக் கொள்ள வேண்டும். 

அதைவிடுத்து பொது மக்களின் பாதையைப் பயன்படுத்த முடியாது. முஸ்லிம்கள் நட்டின் சட்டங்களை மதித்து தமது வழிபாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றார். 

20 comments:

  1. If such act done by Muslims and I had made difficulties for others in the area, This should be avoided.

    If an individual who felt difficulty due this act in that area can raise this issue BUT not those who attack Muslims Masjid can shout for this,

    If the Muslims have already taken permission from authority,, then No body should shout for this.

    HOWever, We Muslims should not make the life of other citizens hard by any of our acts that can be avoided.

    In Another View.

    Why they pray on ROAD ? Due to the lack of space in the Masjid. So it is for authority to give them more space for this Citizen make their worshiping place bigger and pray inside with peace.

    NOTE: So many other religious activities are carried out through major crowded cities by other religious groups, but Muslims have never opposed those activities. We do not want to make confrontation.. So we try not correct others mistakes But Ours.

    Why Double standard ?

    ReplyDelete
  2. வேண்டாம் என்ற பொண்டாட்டிக்கு கால் பட்டாலும் கைபட்டாலும் கோபம் என்ற கதை போல் இந்த துவேசம் பிடித்தவர்களின் பிடிவாதம் இருக்கிறது.அதேவேளை நம்மவர்கள் அவ்வாறு நடந்தால் உண்மையில் அது தப்பான விடயம் இட வசதி இல்லாவிட்டால் இடவசதியான இடத்துக்கு சென்று நம் கடமைகளை செய்ய வேண்டும் அல்லது அதற்குரிய அனுமதியை எடுக்க வேண்டும் இதில் நம்மவர்கள் ஜும்மா தொழுகை குத்பா முடிந்தவுடன் இரண்டு ரக்கா அத்துக்கள் தொழுவதற்கு மட்டும் பாதையை மறிக்கிறோம் என்ற ஒரு சிறிய சிந்தனையால் ஏற்ப்படும் விளைவுகள்தான் இவ்வாறான பிரச்சினைக்கு காரணமாக அமைந்து விடுகிறது. மற்றது நம் அரப்படித்த உலமாக்கள் ஒரு ஊரில் ஒரு ஜும்மா தொழுகைதான் கடக்க வேண்டும் என்ற முரட்டு பிடிவாதத்தின் விளைவுதான் இவ்வாறான இட நெருக்கடிக்கு காரணமாக அமைகிறது அந்தந்த பகுதியில் உள்ள சிறிய பள்ளியாக இருந்தாலும் ஜும்மா தொழுகை நடத்தினால் இந்தப்பிரச்சினை வர வாய்ப்பு இல்லை.இன்னும்தான் இந்த உலமாக்களுக்கு உலகமும் இஸ்லாமும் விளங்கவில்லை.அரபு நாடுகளில் எல்லாம் இருநூறு மீட்டருக்குள் இரண்டு மூன்று பள்ளிகளில் ஜும்மா நடக்கிறது.இது எந்த நபி காட்டித்தந்தது.கொஞ்சமாவது சொந்த மூளையை வைத்து சிந்தித்து இஸ்லாத்தை வளர்க்க வேண்டும் அதை விடுத்து அடுத்தவனுக்கு இடைஞ்சல் கொடுத்து வம்புக்கு இழுக்க வேண்டிய அவசியம் இல்லை.

    ReplyDelete
  3. 893. அய்லாவின் அதிகாரியாக இருந்த ருஸைக் இப்னு ஹகீம், வாதில்குரா கிராமத்தில், தாம் ஜும்ஆ நடத்தலாமா என இப்னு ஷீஹாபுக்கு எழுதிக் கேட்டார். அப்போது நானும் அவருடன் இருந்தேன். அக்கிரமாத்தில் சூடான் நாட்டவரும் பிறரும் இருந்தனர். இப்னு ஷீஹாப், ஜும்ஆ நடத்துமாறு ருஸைக் இப்னு ஹகீமுக்குக் கட்டளையிட்டார்கள். இப்னு உமர்(ரலி) வழியாக ஸாலிம் அறிவிக்கும் பின்வரும் நபிமொழியை அதற்கு ஆதாரமாக காட்டினார்கள்.
    "உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப் படுவார்கள். ஓர் ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப் படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஓர் ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவான்."
    "ஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான்" என்றும் கூறினார்கள் எனக் கருதுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இதிலிருந்து நீங்க என்ன சொல்ல வருகிறீர்

      Delete
  4. Next month wesak &posan perahara thinanaggalil unmeyana kastam wilangum

    ReplyDelete
  5. In Sri Lanka where there are all three communities live, better we have tolerance ( religious tolerance, language tolerance etc) When there is Kandy Perahara goes on the way all respect and cooperate, and during the other Vesak and special days when there are procession moves on we all give way respecting each other. This happened in Nuwaraeliya as there were no space in the mosque they had to manage it for five minutes which the Police had known and allowed, Muslims did not make any difficulties in the road, people there gave way for prayer and they did not create an issue on it but this Balavegaya. On the other hand, Muslims also have to behave like Muslims during the Sinhala & Hindu New Yearm It is not a festival for Muslims. But Nuwaraeliya Municipal Council and other towns would have felt the business there this time was just because of Muslims who gathered in the hill country. But narrow minded petty political goons will always shout as they can not bear it.

    ReplyDelete
  6. இது போன்று ஐவேளை தொழுகையிலும் முஸ்லீம்கள் ஜமாஅத்தாக தொழுவானார்களாக இருந்தால் ஒரு ஊருக்கு ஒரு ஜும்ஆ என்ற கோட்பாடு தகர்க்கப்படும்.
    இறைவனின் உதவியும் றஹ்மத்தும் பூமியை ஆட்கொள்ளும்.
    ஆனால் இங்கு ஏற்பட்டிருக்கு சன நெரிசலுக்கான காரணம் என்ன?

    நுவரெலியாவுக்கு கூலா இருக்கப்போயி வந்த வினை.

    நாங்கள் நாங்களாக இல்லாவிட்டால் காபிர்களைக்கொண்டே தண்டிக்கப்படுவோம்.

    ReplyDelete
  7. mustafa jawfer சொல்வது சரி, மேலும் பிரயாணிகளுக்கு ஜும்மா கடமையில்லை என்னும் பொழுது, ஏன் வீணாக வருத்தி, வீதிகளை மறித்து ஜும்மா தொழுகை நடத்த வேண்டும்?

    கொழும்பின் முக்கிய பகிதிகள் மற்றும் நாட்டின் சில இடங்களிலும் வீதிகளில் ஜும்மா தொழுவதை காணக் கூடியதாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இடப்பிரச்சினை, இடப்பிரச்சினையில் முக்கிய பங்கு வகிப்பது பிரயாணிகள். பிரயாணிகளுக்கு ஜும்மா கடமையில்லை என்பதை புரிந்துகொண்டால், ந்தப் பிரச்சினையை இலாவாக கையாளலாம்.

    வெசாக் தொடர்பான கருத்து உண்மைதான், ஆனால் வெசாக் வருடத்திற்கு ஒருதடவை வருகின்றது, ஜும்மாவுக்காக வீதிகளை மறிப்பது சில இடங்களில் ஒவ்வொரு வாரமும் நடகின்றது.

    மார்க்கத்தை சரியாக புரிந்து, சலுகைகளை பயன்படுத்தி செயற்படுத்தினால் கூட பல்வேறு பிரச்சினைகளை தவிர்க்கலாம். வீண் பிடிவாதம் வேண்டாமே!

    ReplyDelete
  8. முஸ்தபாவின் கருத்துக்கள் உண்மைதான்

    ReplyDelete
  9. Governments will change but this racism will never stop.
    Instead , the pressure will keep increasing against the
    minorities . It is embarrassing that we are waiting
    until our opponents shout at us . Well , we might say
    that we are doing this since very long but what matters
    is , wrong is wrong and it is more nonsensical at a time
    of tension .
    It is like "the pot calls the kettle black." If we say
    we Muslims are intelligent , then let us prove it with
    our morals . These racist monks are not going to stop
    their intolerance against non Buddhists because it is
    now their business . They got too many rods in their
    eyes but trying to magnify the dust in our eyes .
    They forget the whole one week,day and night Vesak on
    all public roads all over the country and talk about
    one hour on a Friday by Muslims and not all over the
    country . We can go on arguing or discussing but first
    of all let us look at our own selves . Let us not be a
    wrong example for others to follow and be wrong to us .
    Let us understand that the world is changing every
    second , minute , hour and day ! Our success lies on
    getting a grip on that change and reacting in a suitable
    way . When we build mosques they are shouting and when
    we come on the road because of lack of space , they are
    still shouting ! A good Buddhist will come forward to
    help the sufferers find a solution to the suffering which
    is also a public nuisance . But what's happening here ?
    THEY SAY THEY WILL DO THE SAME WRONG AGAINST US AS A
    WARNING TO US AND THE AUTHORITY . We don't have to care a
    damn about these fellows but we have to understand that
    we ourselves have elected a government of "good
    governance." Let us then be law abiding citizens ! Let us
    learn it .

    ReplyDelete
  10. it shows there is a need to build more number of mosques.

    ReplyDelete
  11. This is how the other communities look at us when we pray Jummah blocking the whole road...
    There's a truth in the argument....
    Agreed with the argument but the way it has been delivered...
    Could have used polite words...
    Yes, there's a practical issue praying on the road blocking the whole road, no matter 5 minutes or even 30 seconds...
    On the other hand, Friday prayer is a mandatory for Muslims and most mosques in the urban areas are not sufficiently spaced.
    But it's not an excuse for you to block the whole road.
    People need to be more concerned about other commuters/public not to cause any inconvenience as Islam teaches us...
    Alternatively worshippers need to take a serious care to leave some space /lanes for the vehicles to pass through...
    And others too should be able understand the case and try to cope with the inconvenience caused by reduced number of lanes on the road for 5 to 10 minutes...
    And it worth mentioning that, Sri Lanka is a country with peaceful citizens (well, majority of us) and we Muslims are privileged to enjoy the freedom to practice our religion. It is us, through our irresponsible acts, are responsible for growing hatred towards Muslims in the beautiful island...
    We always keep blaming others for their reaction instead of rectifying our own mistakes...

    ReplyDelete
  12. If there is no room to have a one jummah prayers. Make two jummah with the two Imam. One after the other.

    ReplyDelete
  13. முஸ்தபாவின் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது....
    எனது கருத்தும் அதுவே....

    ReplyDelete
  14. Musthafa sari but iyakka reeziyaha pesuhirazu

    ReplyDelete
  15. What about Perahera, They disturb for hours & Days

    ReplyDelete
  16. When Buddhist & Hindus creating traffic jam by blocking the most of the roads in srilanka to carry out their many variant PEREHARAS won’t be disturb the road users?

    ReplyDelete
  17. When Buddhist & Hindus creating traffic jam by blocking the most of the roads in srilanka to carry out their many variant PEREHARAS won’t be disturb the road users?

    ReplyDelete
  18. சிறப்பான , தேவையான கட்டுரை. உண்மையில் முஸ்லிமலகள் இந்த காலகட்டத்தில் ( festive season ) பயனம் போவதற்கான காரணம் அவர்களும் சிங்கள, தமிழ் புத்தாண்டை கொண்டாடுவதற்காக அல்ல, மாறாக எல்லோருக்கும் அது ஓய்வு காலம் ஆதலால் தான். நானும் இலங்கையில் இருந்ததால் இம்முறை கடந்த வருடத்தைவிடவும் அதிகமான , வாகனங்கள் இருந்ததை காண முடிந்தது.
    இருப்பினும் முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டு இவ்வாறான முட்டாள் தனமான , இஸ்லாம் சொல்லாத்தன் வேலைகளை செய்வது இஸ்லாமியர்களுக்கு பாதிப்பைதான் உருவாக்கும்.
    சகோதர்ர் முஸ்தபா சொன்னது போல் பிரயாணத்தின் போது Jummah தொழுகை கடமையில்லை.
    இன்னுமொரு வேடிக்கை என்னவென்றால் இரவில் சூதாட்டம் , குடிபோதையில் ( இவர்கள் இதற்காகவே நுவரெழியவுக்கு வருடாவருடம் வரும் தாடி வைத்த ஹாஜியார்கள். ஊரில் இந்தப்பூனையும் பால் குடிக்குமா என நினைக்கவைப்பவர்கள், இவர்கள் சம்பாதித்த காசை இவ்வாறுதான் செலவழிப்பார்கள்) இருந்தவர்களும் ஜும்மா்தொழுகையில் இருந்தார்கள், அவர்களின் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பது அவர்களுக்கு தெரியாதோ?
    இன்னுமொரு விடயம் கண்டதையைல்லாம் வீசி அந்த இடத்தையே நாசமாக்கிவிட்டுதான் போகிறார்கள். சுத்தம் ஈமானின் பாதி. அது உடற்சுத்தம் மாத்திரமல்ல புறச்சுத்தமும் தான்.
    சகோதரி Riswan Nafees, Perahara நடத்துவதற்கு அரசாங்க அனுமதி உள்ளது. மாறாக அவர்கள் 8 மணி நேரத்துக்கு முன் போலிசில் அனுமதி வழங்கி இதை செய்திருக்கலாம் என்று கூறியுள்ளார்கள். (அனுமதி எடுத்தும் அதை செய்யவேண்டிய கடமை நமக்கில்லை. அந்த தொழுகையே கடமையில்லாமல் இருக்கும் போது , எதற்கு அனுமதி பெற வேண்டும்? இடையூறு விளைவித்து தொழவேண்டும்?)

    ReplyDelete

Powered by Blogger.