Header Ads



இலங்கை முஸ்லிம் அமைப்புகளிடையே முரண்பாடு - BBC


இலங்கையில் தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டதை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டங்கள் குறித்து முஸ்லிம் உலமாக்களின் சபைகளின் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

வெள்ளீயன்று நடந்த இந்தப் போராட்டத்தை அமைதியாக பிரார்த்தனைகளுடன் மாத்திரம் நடத்துமாறு அகில இலங்கை ஜாமியத்துல் உலமா சபை அங்குள்ள பத்திரிகைகளில் விளம்பரங்களை வெளியிட்டிருந்தது.

ஆனால், இந்த தினம் ''கறுப்பு வெள்ளியாக'' முஸ்லிம்களால் அனுட்டிக்கப்பட வேண்டும் என்று இலங்கை ஜாமியத்துல் உலமா சபை என்னும் அமைப்பு கோரியிருந்தது.

இலங்கை ஜாமியத்துல் உலமா சபையின் கோரிக்கையை துரதிர்ஸ்டவசமானது என்று அகில இலங்கை ஜாமியத்துல் உலமா சபையின் சார்பில் பேசிய அதன் துணைப் பொதுச் செயலர் எம். எஸ். எம். தாஸிம் மௌலவி கூறியுள்ளார்.

அதேவேளை, அகில இலங்கை ஜாமியத்துல் உலமா சபை இந்த விடயத்தில் மென்போக்கைக் கடைப்பிடிப்பதாக கூறியுள்ள இலங்கை ஜாமியத்துல் உலமா சபை என்னும் அமைப்பு, அதனால் தாம் அதில் இருந்து பிரிந்து வந்து விட்டதாக கூறியுள்ளது.

5 comments:

  1. தருணம் பார்த்து போட்டி உலமா சபை களத்தில் இறக்கப் பட்டுள்ளது. அரசியல் கட்சிகளை பலவீனப் படுத்தியதைப் போல் உலமா சபையயை பலவீனப் படுத்த எடுக்கும் நயவஞ்சக முயச்சிகளை இஸ்லாமிய மக்கள் நிராகரிக்க வேண்டும்

    ReplyDelete
  2. shame......
    shame......

    ReplyDelete
  3. யார் இவர்கள் முஸ்லிம் சமுதாய துரோகிகள். இவர்களை சமுதாயம் அங்கீகரிக்க கூடாது. பெயர்லயே குழப்பம். எனக்கு தெரிந்து அகிலா இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தான் இருந்தது .இவர்கள் யார் இவர்களின் கோரிக்கை பிறகு முதலில் இவர்கள் பெயரை மாற்றட்டும்.முஸ்லிம் சமுதாயம் உங்களின் விளையாட்டு மைதானமா? இறைவனுக்கும் பதில் சொல்லனும் சமுதாயத்துக்கும் பதில் சொள்லனும்

    ReplyDelete
  4. muslimkal sinthanai reethiyaha poarada vaendiya kaalakattathil,thoora noakudan seyatpatta ahila ilankai jamiatul ulama shabaiyin mudivu siranthathahe oru thelivanathahavum paarkappadukirathu.

    but puthithahe mulaitha ilanka jamiatul ulama enkira ivarhal aathirathil edutha mudivahavum thoora noakatru iruppathoadu ariveenamahavum kaanappadukirathu aththoadu emathu samuthayathil pilavuhalukkum valivahukkithu,ivarhalukku iraivan nalla arivai valankuvothoadu ivarhalinaal samuthayathil entha vithamana paathippuhalum varamal iraivan arul puriya vaendum...amen

    ReplyDelete
  5. At a time when SL muslim community should get together and show their unity, this kind of an action is like digging our community's grave with our own hands. sometimes i doubt how they are called moulavi's in our society because they cannot understand the simple teaching Al-Quran that if we are to succeed as a community we have to be united.
    Aren't their intention and the racist buddhist people's intention the same? to make muslim community "WEAK" and through that to see the end of our community. Shouldn't they fear allah for making our community weak? may allah protect muslim ummah in sri lanka.Ameen
    A disheartened Muslim

    ReplyDelete

Powered by Blogger.