இது தர்மத்தின் புதிய வடிவம்...
இது தர்மத்தின் புதிய வடிவம். சிலர் பணத்தை தர்மம் செய்வதுபோல இவர் மானத்தை தர்மம் செய்கிறார். ஏனெனில் இவர் ஏழை. தர்மம் செய்ய பணமில்லை.
ஆகவே தன் மீது பிறர் அவதூறு கூறினாலும், புறம் பேசினாலும், தன் மானத்திற்கு இழுக்கு ஏற்படுத்தினாலும் அந்த உரிமையை தர்மம் செய்கிறார்.
எவ்வளவு உயர்ந்த தர்மம்! எனவேதான் இவரைப் போன்று இருங்கள் என்று நபிகளார் கூறினார்கள்.
அல்லாஹ் தனது படைப்புகளை நடத்தும் விதத்தைப் பாருங்கள்!
மன்னிப்பு கருணையின் ஒரு பகுதி. கருணை காட்டுங்கள், கருணையைப் பெறுவீர்கள்! மன்னியுங்கள், மன்னிக்கப்படுவீர்கள்!
உங்களுக்கும் உங்கள் சகோதரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால்; அவரை மன்னிக்க அதிக நேரம் காத்திருக்காதீர்கள்.
ஏனெனில், கருத்து வேறுபாடு எவ்வளவு காலம் நீடிக்கிறதோ, இதயங்களும் அவ்வளவு கடினமாக மாறும்.
உங்களுக்குத் தீங்கு செய்த அண்டை வீட்டாரை, சக ஊழியரை மன்னியுங்கள்.
ஏனெனில், வெறுப்பு உள்ளத்தை கெடுக்கிறது. மன்னிப்பு உள்ளத்தைத் தூய்மைப்படுத்துகிறது!
இது கடினம் என்றும், மனித மாண்பு முதன்மையானது என்றும் தெரியும்தான்.
ஆயினும் என்ன செய்ய? தேங்கி நிற்கும் நீரில் துர்நாற்றம் அல்லவா வீசும்!
அனைத்தையும் மறந்து அன்புடன் அரவணையுங்கள் என்று சொல்லவில்லை. மாறாக, எதிரியைப் போல விலகிச் செல்லாதீர்கள் என்கிறோம்.
வள்ளல் நபியின் வாக்குறுதியே நமக்கு போதுமானது:
"மன்னிப்பின் மூலம் கிடைக்கும் கண்ணியத்தைத் தவிர, வேறு எதிலும் அல்லாஹ் ஓர் அடியானுக்கு உயர்வை அளிப்பதில்லை!"
✍️ நூஹ் மஹ்ழரி

Post a Comment