முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி முயற்சிப்பது பாராட்டுக்குரியது
(Tv) பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சிமாநாட்டினை சீர்குலைக்கும் நோக்கிலும் முஸ்லிம் மக்களை அதற்கு பலிக் கடாவாக்கும் வகையிலும் சில வெளிநாட்டு தீய சக்திகள் கங்கணம் கட்டி வருவதாக தேசிய சமாதானத்திற்கான சர்வமத முன்னணியின் இணைத் தலைவரும், முஸ்லிம் விவகார ஜனாதிபதியின் இணைப்பாளருமான அல்ஹாஜ் கலாநிதி ஹசன் மெளலானா தெரிவித்தார்.
சமீப காலமாக முஸ்லிம் மக்களின் இயல்பு வாழ்க்கையினை சீர்குலைக்க, தீய சக்திகள் எடுத்துக் கொண்ட முயற்சிகளிலிருந்து இது தெளிவாக்கப்பட்டுள் ளதாகவும் அதை உணர்ந்து முஸ்லிம்கள் இத் தீய சக்திகளின் சதிவலையில் சிக்காது தங்களையும் நாட்டையும் காக்க முன்வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இலங்கைக்கும் முஸ்லிம் நாடுகளுக் குமிடையே நீண்ட காலமாக இருந்து வரும் நட்பு ரீதியான தொடர்புகளை அறுப்பதை நோக்கமாகக் கொண்டு வெளிநாட்டு பணத்தை பெறும் இத் தீய சக்திகள் சமீபகாலமாக செயற்பட்டு வருவதாகவும், அவர் மேலும் கூறினார்.
யுத்தத்தின் பிடியிலிருந்து ஜனாதிபதி அவர்கள் பெற்றுக் கொடுத்த தலைமைத்துவத்திற்கு அன்றும் இன்றும் முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு இருந்து வருகின்றது. தொடர்ந்தும் அது இருக்கு மெனவும் அவர் கூறினார்.
இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம், குறிப்பிட்ட பிரச்சினையை தீர்த்துவைக்க ஜனாதிபதி முயற்சி எடுத்து வருவதை தாம் மிகவும் பாராட்டுவதாக ஹசன் மெளலானா தெரிவித்தார்.
வெளிநாட்டவரின் ஆசைவார்த்தையில் சிக்கிய சிலரால் இந் நாட்டின் மீது ஒற்றுமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையர் மிகுந்த ஒற்றுமையுடன் அபிவிருத்திப் பாதையில் வேகமாக முன்னேறிக் கொண்டிருப்பதை பொறுக்க விரும்பாத வெளிநாட்டு தீய சக்திகளே நம்மீது அவதூறான பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக கலாநிதி ஹசன் மெளலானா கூறினார்.

What your president did for Muslims with regards 24 mosques, Halal problem, Meet shop incidents. If you are an adviser of him, please get your salary and facilities and keep quiet.
ReplyDeleteYou don’t have any rights to talk about Muslims.
Unmaithan intha velinattu sakthikku vilipovathu muslimkal illai.BBSyum,Rawana,Helaurumaya ponta Singala sahothararkalthan enpathai neengal Janathipathikku eduththu sollunkal.Muslimkal summathane irukkirarkal balaye kitturavan yaar?.Ellam panam paduththum padu........
ReplyDeleteha..ah..
ReplyDeleteஎன்ன மாதிரி முயற்சி அய்யா???... பள்ளிய உடைச்சி தரமட்டமாக்கிற முயற்சியா ????
ReplyDeleteஹசன் அவர்களே, அரசாங்கத்திற்கு வால் பிடித்து சமூகத்தை விற்க்காதீர்கள். மக்கள் இனியும் ஏமாறத் தயாரில்லை. புலிப் பயங்கரவாதத்தை அடக்கிவிட்டதாக பெருமை பேசும் இந்த அரசாங்கத்திற்கு நாட்டுகுள்ளிருந்து நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் சிறு குழுவை அடக்க முடியாதுள்ளது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அரசாங்கத்திற்கு கூஜா தூக்கும் உங்களைப் போன்றவர்கள்தான் சமுகத்தின் சாபக்கேடு.சுயலாபத்திற்காக எதையும் செய்யும் நிங்கள் உங்கள் வாயையும் ...... முடிக்கொண்டிருந்தால் போதும். சமூகம் உருப்படும்.
ReplyDeleteDear brother in islam,
ReplyDeleteஇவருக்கு அல்லாஹ் சீரிய சிந்தனையையும், தெளிவான இஸ்லாத்தின் வழிகாட்டல்களையும் வழங்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன். நான் அறிந்த வரையில் அண்மைக்காலங்களாக முஸ்லிம்கள் சந்திக்கின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு இவர்தான் காரணமாக இருந்திருக்கின்றார். முஸ்லிம்கள் தொடர்பாகவும், முஸ்லிம் அமைப்புக்கள் தொடர்பாகவும் ஜனாதிபதியிடம் நச்சுக் கருத்துக்களை விதைத்ததாக ஜனாதிபதியே இவரை சுட்டிக் காட்டிப் பேசியதை நேரடியாக ஜனாதிபதி ஊடாக செவியுற்ற ஒருவர் மூலம் இவரைப் பற்றி தெரிந்துகொண்டேன். (தெரிவித்தவர் நம்பகமான அறிவிப்பாளர்) சில நலன்களையும், பதவிகளையும் பெற்றுக்கொள்வதற்காக சமூகத்தை விற்கின்ற விஷமிகளிடம் இருந்து யாஅல்லாஹ் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
தெய்வமே தீயசக்தி தீயசக்தி என்று எல்லோரும் சொல்லுறீங்களே அது யாரு நான் நினைக்கிறேன் அது நீங்கள்தான் என்று. பணத்திற்கும் பதவிக்கும் சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டவர்கள் ஆறிக்கை விடுகிறார்கள் இதற்காக இவர்கள் எதுவும் செய்வார்கள் எதையும் விட்டுகொடுப்பார்கள் சொந்த மதத்தை கூட
ReplyDeleteMuslim ????????????
ReplyDeleteஅல்லாஹ்வே!
ReplyDeleteஹசன் மௌலானா போன்றோரின் உள்ளங்களில் உண்மை முஸ்லிம் உணர்வுகளை கொடுப்பாயாக.
எகிப்தில் இஸ்லாமிய ஆட்சியை கொண்டுவர தவிக்கும் முஸ்லிம்களை படு கொலை செய்வதும் மேற்கைத்தேய சதி வலையில் சிக்குண்ட முஸ்லிம் இராணுவ ஆட்சியாளர்களே!
இலங்கையிலும் முஸ்லிம்களின் மார்க்கத்துக்கு இதுவரைக்கும் அச்சுறுத்தலாக இருந்து சுமார் 25 பள்ளிவாயல்களை மூடுவித்த பெருமைகொண்ட மகிந்த தலைமையிலான அரசுக்கு பாராட்டு தெரிவித்து மஹிந்த பிரியர்களாக காட்டிக்கொள்ள போட்டி போடும் முஸ்லிம் பெயர்தாங்கிய அரசியல்வாதிகளும், உலமாக்களும் இக்கால சூழலிலும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
ஏனோ இவர்கள் இறுதியாக அல்லாஹ்விடம் செல்ல இருப்பதை மறந்து விட்டார்களோ தெரியவில்லை.
"அல்லாஹ்வே நீயே எங்கள் பாதுகாவலன்".
ம்ஹிந்த்யால் தீர்க்க முடியாத பல பிரெச்சினைகளை பட்டியலிடலாம் ஆனால் தீர்க்கப்பட்ட பிரெச்சினை ஒன்றை சொல்லுங்க பார்ப்பம் முதல்ல அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்க
ReplyDeleteWho is this person???
ReplyDeleteHe is the leader of so called traditional Muslims. Azath Sally has been arrested based on his complaint. According to reliable sources, he couldn't complete his Grade 10 properly, But he is holding a Phd ? He is the adviser to the President.
ReplyDeleteyour the one give all details to bbs.who is dawheed ,salafi what there doing.your the one red cup munafiq.
ReplyDeleteRespected sir.
ReplyDeletesalam i am regret to inform you that i am one of the regular jafna muslims follower some times my commences. you all are not posting to public just i want to know the reason pls?
thanks and.
Regards
MOhammed.
BBS கூறும் பாரம்பரிய முஸ்லிம் என்பதன் வரைவிளக்கணம் தாங்கள் தானே.....???
ReplyDelete