மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கு எதிரான தமிழ் இனவாதம் - பஷில் ராஜபக்ஷ கண்டிப்பு
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படும் வீட்டுத் திட்டம் கிழக்கில் இன்று 22-05-2013 புதன்கிழமை சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதேவேளை, பெரியபுல்லுமலையில் வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து விட்டு அமைச்சர்கள் வெளியேறிக் கொண்டிருக்கையில் அங்கு வாசலில் நின்று கொண்டிருந்த முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தலைமை தாங்கும் ரீ.எம்.வீ.பி. கட்சியின் உயர்மட்ட உறுப்பினரும் செங்கலடி வர்த்தகருமான தியேட்டர் மோகன் 'உறுகாமத்தில் இந்திய அரசின் வீட்டுத் திட்டமா அல்லது இஸ்லாமிய குடியேற்றத்திட்டமா?' என்ற இனத்துவேஷ துண்டுப் பிரசுரத்தை விநியோகித்துக் கொண்டிருந்தார்.
அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கும் இந்தத் துண்டுப் பிரசுரம் கொடுக்கப்பட்டது. பொலிஸ் மற்றும் பாதுகாப்பு உயரதிகாரிகள் முன்னாலேயே இந்தத் துண்டுப் பிரசுர விநியோகம் இடமபெற்றுக் கொண்டிருந்தது.
இதனை அடுத்து உறுகாமம் முஸ்லிம் கிராமத்திற்கு வந்திருந்த அமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்ட அந்த வர்த்தகரின் இனத்துவேஷ நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்ததுடன் இதனை அனுமதிக்கவும் கூடாது என்றார்.
துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் போது ரீஎம்வீபி கட்சியின் தலைவரும் முன்னாள் முதலைமச்சருமான பிள்ளையான் அமைதியாகப் பார்த்துக் கொண்டுதானிருந்தார். இந்த துண்டுப் பிரசுர விநியோகத்தால் நிகழ்வுக்கு வந்திருந்த முஸ்லிம்கள் மத்தியில் பெரும் பதற்றமும் அச்ச நிலையும் ஏற்பட்டது.
1990 ஆம் ஆண்டு கிழக்கிலே உறுகாமம் கிராமத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதோடு இனச்சுத்திகரிப்புச் செய்து முற்றாக வெளியேற்றப்பட்டுமிருருந்தனர். இன்றளவும் அவர்கள் நாட்டின் பல பாகங்களிலும் அகதிகளாகவே காலங்கழிக்கின்றனர்.


அகில இலங்கை ரீதியில் நடைபெறும் சிங்கள இனவாதம் இன்னும் இவருக்கு தெரியவில்லையே
ReplyDeleteமுஸ்லீம்களின் ஆதரவைபெற அரசின் சூழ்ச்சியோ என்னவோ
ReplyDelete