ரவூப் ஹக்கீம் சமர்ப்பிக்கவுள்ள சட்டமூலம் மிகக் கொடுமையானது - சுமந்திரன் எம்.பி.
அரசாங்கம் வட மாகாண சபையை திரிபுபடுத்த புதிய சட்டமூலம் ஒன்றை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை கட்டியெழுப்பும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் தாம் தற்போது வசிக்கும் பிரதேசங்களில் இருந்து கொண்டே வாக்களிப்பதற்கு அரசாங்கம் ஒரு யோசனையை முன் வைத்துள்ளது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதரிக்கும்.
இந்நிலையில் தேர்தல் இடாப்பில் பெயர் பதியப்படாதிருந்தாலும் 1983 ஆம் ஆண்டுக்கு முதல் அவர்கள் வடக்கில் வசித்திருந்தால் அவர்கள் வாக்களிக்க முடியும் என்றதொரு சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஊடாக சமர்ப்பிக்கவுள்ளது.
இச் சட்டமூலம் மிகவும் கொடுமையானதாகவும் ஜனநாயகத்தை தலைகீழாக கவிழ்க்கும் வகையிலுமே அமையவுள்ளது. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோல்வியடையச் செய்யும் நோக்கமே அரசாங்கத்திற்கு உள்ளதென அவர் மேலும் தெரிவித்தார். vi

நம்ம தலைவருக்கு கொடுமைய விட பொழப்பு தான் முக்கியம் சார்...
ReplyDeleteMuslim congras vada maakaanathil vetri perave intha athiradi nadavadikkai.
ReplyDeleteMr, Sumanthiran M.P.
ReplyDeletehe does not worry about anything. even it is harm to the entire tamils and muslims.
Mr, Sumanthiran M.P.
ReplyDeletehe does not worry about anything. even it is harm to the entire tamils and muslims.
Please keep in mind this the plan of government going to ament in parliment through Hakeem you can witness in forthcoming election how hakeem is going to thrown from the seen
ரவூப் ஹக்கீமுக்கு மக்களுக்கு உதவிசெய்யவேண்டுமென்ற மனப்பானமையுமில்லை, இதுவரை அவர் என்ன செய்துள்ளார் என்பதை பார்த்தால்? ஆனால் மக்கள் அவர்மீது ஆத்திரப்படுகின்ற காரணம்; அவர் உதவி செய்யவில்லை கட்சி தலைமைத்துவம் என்ற பெயரில் என்னவேண்டுமானாலும் பண்ணித்தொலைக்கட்டும் ஆனால் மக்களின் உரிமைகளை இழக்கும்போது அதற்கு அவர் என்ன செய்துள்ளார் ஒன்றும் செய்யவில்லை பரவாயில்லை எமது உரிமைகள் பறிக்கப்படும்போது அவர் தரகராக பயன்படுத்தப்படுகின்றார் இதன்போது நாம் எப்படிப்பொறுமையாக இருப்பது.........
ReplyDelete