Header Adsயூத விஞ்ஞானிக்கு அறிவியல் ரீதியாக நேர்வழிகாட்டிய அல்குர்ஆன்..!


(மௌலவி அ.முஹம்மது கான் பாகவி)

கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்திற்கு வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம்.

‘மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்” (2:228) என்கிறது அத்திருவசனம்.

மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே -அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் ‘இத்தா’ இருந்த பின்பே மறுமணம் செய்ய வேண்டும்

‘‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும்’’ (2:228) என்கிறது ஒரு வசனம். இந்த வசனத்தைப் படித்தபோதுதான் ராபர்ட் மனம் மாறினார்.

ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்கொண்டிருந்தார். கைவிரல் ரேகைப் பதிவு (Finger Printing) ஒரு மனிதனை அடையாளம் காட்டுவதைப் போன்றே, டி.என்.ஏ. ரேகைப் பதிவு தம்பதியரை அடையாளம் காட்டிவிடும். ‘ஒரு பெண்ணில் பதிவாகியுள்ள ஆணின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு மூன்று மாதங்களுக்குப் பிறகே அழியும்” என்பது ராபர்ட்டின் ஆராய்ச்சி முடிவு. அதையே குர்ஆனின் இவ்வசனம் கூறுகிறது என்பதைக் கண்ட யூத விஞ்ஞானி ஆடிப்போனார்; குர்ஆனை ஏற்றார்.

இது தொடர்பாக, எகிப்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது சையித் கூறுகிறார்:

அறிவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தில் இணைந்துள்ளார். தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண் தனது பாலின ரேகையைப் பெண்ணிடம் விட்டுச்செல்கிறான்.

அந்த ரேகை மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுபிடித்தார்.அதற்கேற்ப, அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் கள ஆய்வில் இறங்கினார் அவர் அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவர்களது ரேகை மட்டுமே பதிவாகியிருந்தது. அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது, அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களில் பதிவாகியிருந்தன.

ராபர்ட் கில்ஹாம் அதிரடியாக ஒரு காரியம் செய்தார். அவர் தம் மனைவியை மருத்துவப் பரிசோதனைக்கு ஈடுபடுத்தினார். அவளிடம் மூன்று ரேகைப் பதிவுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அத்துடன் தம்முடைய மூன்று மகன்களில் ஒருவன் மட்டுமே தமக்குப் பிறந்தவன் என்பதையும் கண்டறிந்தார்.

இதிலிருந்து, மூன்று மாத ‘இத்தா’ ஏன் கடமையாக்கப்பட்டது என்பதற்கான காரண விளக்கமும் கிடைக்கிறது. முந்தைய கணவனின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு முற்றாக அழிய மூன்று மாதங்கள் பிடிக்கும். அதன்பின் அவள் மறுமணம் செய்துகொண்டால், டி.என்.ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது. இல்லையேல், மறுமணம் செய்தபின் பிறக்கும் குழந்தையின் டி.என்.ஏ.வும் முந்தைய கணவனின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போக இடமுண்டு. குழந்தை யாருடையது என்ற குழப்பம் வெடிக்கும்.

5 comments:

 1. bismillahir rahmanir raheem

  கர்ப்பவதிகளின் இத்தாக் காலம் பிரசவித்தவடன் முடிவடைகிறது. ஒரு கணவன் மனைவியை விவாகரத்துச் செய்து அடுத்த நாளே பிரசவித்து விட்டால் அவளைத் திருமணம் முடிக்கலாம். உதிரக்கப்போக்க முடிந்த பின் திருமணம் என்றாலும் 40 நாட்களே எடுக்கும். 3மாத ரேகை பிசகுகிறதே!!!!!!!!!!!!!! கொஞ்சம் இந்த செய்தியின் உண்மைத் தன்மையை மீள்பரிசோதனை செய்யுங்கள்

  ReplyDelete
 2. எல்லாவற்றிலும் சந்தேகப்படுவதை விட மேற்படை ஆராச்சியாளர் இஸ்லாத்திற்கு வந்தது உண்மை என்றால் அவரின் ஆராச்சி தொடரும் என்று எதிபார்த்து இருப்போம் மேலும் பேறுகாலம் முடிந்து 40 நாட்கள் முடிய என்பது மறு மனத்திற்கான அனுமதியே
  அல்லாஹ் மிக அறிந்தவன் ....

  ReplyDelete
 3. 3 மாதத்திற்குள் மறுமணம் செய்தால் பிந்திய கணவனின் பிள்ளை முந்திய கணவனுடன் ஒத்துப் போகும் என்பதே இஸ்லாம் தடை செய்ததற்கு காரணம் என்கிறார். இதை ஏற்றால் பல குடும்பங்களின் நிலை கேள்விக் குறியாகிவிடும். 'அனுமதிதானே' என்கிறீர்கள். கட்டுரையின் கருவென்ன என்ற ஞாபகத்திலா எழுதினீர்கள்

  ReplyDelete
 4. allahu akbar
  avenay ellavattayoum nanku arinthavan

  ReplyDelete
 5. There are many cases have to be analysed..he considered about the divorced women..further he may attain the research on the pregnancy period and death of the lady's husband.
  Brother questioned about the other case of his research in shaa allah it will also proved as scientific phenomina..Believing and expecting in positive way should be an attitude to be a good muslim rather than thinking wast without doing any researches and all.
  allah knows everything.

  ReplyDelete

Powered by Blogger.