Header Ads



ஈரானியர்களை காப்பாற்றிய அமெரிக்கா


மத்திய கிழக்கு கடற்பகுதியில் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த படகொன்றிலிருந்து  10 பேரை அமெரிக்க கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களில் 8 பேர் ஈரானியர்கள் என்பதுடன் இருவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யு.எஸ்.எஸ் ஜேம்ஸ் ஈ. வில்லியம்ஸ் என்ற போர்க்கப்பலே இவர்களை மீட்டுள்ளது. குறித்த விபத்திலிருந்து காப்பாற்றப்பட்ட அனைவரும் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக அமெரிக்க கடற்படைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கின் கடற்பகுதியில் அமெரிக்க கப்பல்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு ஈரான் ஆரம்பம் முதலே எதிர்ப்புத் தெரிவித்தது. அமெரிக்கா அப்பகுதியில் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.




No comments

Powered by Blogger.