சிக்கலில் மாட்டினாரா ரவூப் ஹக்கீம்..??
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் குறித்து அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அறியவருகிறது.அண்மையில் கிழக்கு மாகாண சபை தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள போதிலும் காவுயுடை பயங்கரவாதம் ஒழிக்கப்படவில்லை. இதுவிடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கவனம் செலுத்த வேண்டுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அமைச்சர் ஹக்கீமின் இந்த வேண்டுகோளை ஆங்கில, சிங்கள ஊடகங்கள் பெரிதுபடுத்தி, அந்தப் பேச்சுக்கு இனவாதம் சாயம் பூசியிருந்தன. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில் பத்திரிகை இந்த விவிகாரத்தை தூக்கிப்பிடித்துள்ளது. ஹக்கீமுக்கு எதிராக அந்தப் பத்திரிகை அண்மைக்காலமாக அதிக செய்திகளை பிரசுரித்து வருகிறது. அந்தப் பத்திரிகை ஆசிரியர் தற்போது ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தீவிர ஆதரவாளர் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.
வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீது மறைமுக குற்றச்சாட்டை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல சுமத்தியிருந்தார். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஹக்கீமை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
வியாழக்கிழமை அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நடாத்திய இப்தார் நிகழ்விலும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்துகொள்ளவில்லை.
இவ்வாறான் நிலையில் அமைச்சர் ரவூப் ஹக்கீமீன் பேச்சு குறித்து அரசாங்க உயர்வட்டாரம் கடுப்பில் இருப்பதாக அறியவருகிறது. கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கு முன்னதாக அரசாங்கத்தின் இந்த அதிருப்தி பகிரங்கப்படுத்தப்படாவிட்டாலும் தேர்தலின் பின்னர் ஹக்கீம் நெருக்கடிகளை எதிர்நோக்கலாம் என நம்பப்படுகிறது. சிலவேளைகளில் அதற்கு முன்னதாக அரசாங்க உயர் வட்டாரம் ரவூப் ஹக்கீமின் பேச்சு குறித்து அவரிடமிருந்து விளக்கம் கோரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எமது முன்னைய செய்தி..!
http://www.jaffnamuslim.com/2012/08/blog-post_1413.html
எமது முன்னைய செய்தி..!
http://www.jaffnamuslim.com/2012/08/blog-post_1413.html
தவளையும் தன் வாயால் கெடும் சுக போகங்களுக்கு ஆசைபடாமல் இப்பவே அமைச்சுகளை தூக்கி எரிந்து விட்டு வெளியேறிநாள் நிச்சயம் மக்கள் இவர்களுக்கு பின்னால் அணிதிறளும் நிலை ஏட்படும் அதட்கு துணிவு இருக்கா இவர்களுக்கு??
ReplyDeleteநாட்டில் காவியுடைப் பயங்கரவாதம் நிலவுவதாக ரவூப் ஹக்கீம் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. விடயம் உண்மை என்பதனை அனுராதபுரம் முதல் ராஜகிரிய வரையான நிகழ்வுகள் காட்டுகின்றன.
ReplyDeleteகிழக்கு மாகாணத்தில் வாக்குகளைப் பெறுவதற்காக ரவூப் ஹக்கீம் இதனை சொல்லியிருக்காமல், கொழும்பில் வைத்து இதனை சொல்லியிருக்க வேண்டும்.
kuttre mulle nenju kurukurukkudu,,, hakeem sonnedu than sari,,,, bt hakeem sari illayeeeeeeeeeeeee
ReplyDeletewill mahinda do the chandrikas mistake of removing hakeem from the cabinet? if he do it is good for SLMC to score some vote in election
ReplyDeleteஇதை நான் எப்போவோ எதிர்பார்த்தேன் இப்படி குண்டக்க மண்டக்கா பேசி இந்த ஆள் மாட்டிக்கொள்வார் என்று. இந்த வாய் மன்னிப்பு எல்லாம் போதாது அந்த காவி காட்டுமிராண்டிகளுக்கு காலில் விழுந்து வணங்க வைப்பானுகள் இந்த ஆளை. இடம் காலம் நேரம் பார்த்து தான் கதைக்க வேண்டும்.மக்களை ஏமாத்தலாம் அல்லாஹ் வை ஏமாத்த முடியாது.இவர் வாயால் தமிழ் புலிகளையே பயங்கரவாதிகள் என்று கூறாது இப்படி காவிகளை பயங்கரவாதிகள் என்றால் எப்படி இருக்கும் இவரை ஒரு கை பார்க்காமல் விடவே மாட்டினம் இது ஒரு வாக்கு எனர்ஜி டோஸ் என இறுதியாக சேலையின் கொடுத்து இப்படி இஸ்லாத்துக்கே பகையை தேடிக்கொண்டார் இவர் ஒரு புத்திசாலியான அரசியல்வாதியா ?
ReplyDeleteஅண்ணர் அடித்தார் அந்தர் பல்டி.
ReplyDeleteithu epdi irukku theryumaaa... srilankan muslims for sale: contact rauff hakeem
ReplyDelete