பௌத்தர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் - ரவூப் ஹக்கீம் பகிரங்க அறிக்கை
TM
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சில நாட்களுக்கு முன் தனது மாகாணசபை பிரசாரத்தின்போது வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக மகாசங்கத்திடமும் ஜாதிக ஹெல உறுமயவிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சில நாட்களுக்கு முன் தனது மாகாணசபை பிரசாரத்தின்போது வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக மகாசங்கத்திடமும் ஜாதிக ஹெல உறுமயவிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
"ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்ட அறிக்கை.
கல்முனை சாய்ந்தமருதுவில் அண்மையில் நான் கூறிய கருத்து, பௌத்தத் தலைவர்கள் மற்றும் ஜாதிக ஹெல உறுமய உட்பட பௌத்த குருமார் இடையே மிகவும் கடுமையான விசனத்தை தோற்றுவித்துள்ளது.
இழுத்தடிக்கும் முயற்சிகளில் ஈடுபடாமல், நான் இலங்கையில் உள்ள சகல பௌத்த மக்களிடமும் தயக்கம் ஏதும் இன்றி மன்னிப்பு கேட்கின்றேன். நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்ற வகையில் இதற்கு முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்றேன். எனவே இந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும்படி இலங்கை மகாசங்கத்திடம் விசேடமாக கேட்டுக்கொள்கின்றேன்.
முஸ்லிம்களின் மனத்தாங்கல்கள் பற்றி நான் குறிப்பிட்டது குறித்த ஒரு இடத்தில் காணப்பட்ட உள்ளூர் விவகாரத்தோடு மட்டுப்படுத்திய பிரச்சினை பற்றியதாகும். ஆனால் துரதிஷ்டவசமாக குறித்த பின்னணியிலிருந்து விலகிய எனது சொற்பிரயோகம், எமது மக்களின் பிரதான சமயமான பௌத்தத்தின் பாதுகாவலர்களாக மகாசங்கத்தினர் பற்றி தரக்குறைவான கருத்துரைத்தது போன்று அமைந்துவிட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்ற வகையில் நான் எப்போதும் முஸ்லிம்கள் இலங்கை தேசத்தின் ஒன்றிணைந்த பகுதியினர் என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். நாம் சிங்கள அரசர்கள் காலத்திலிருந்து சிங்கள மக்களின் அரவணைப்பையும் தாராள மனப்பான்மையையும் அநுபவித்துள்ளோம்.
போர்த்துக்கேய ஆக்கிரமிப்பாளர்களால் துன்புறுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவு வழங்கிய செனரத் அரசனின் காலத்திலிருந்து சிங்கள பௌத்தர்கள் கடைப்பிடித்துவரும் பன்மைவாத கொள்கையை பற்றி சில மாதங்களின் முன் சர்வதேச தாராண்மை கவுன்ஸிலில் பேசியபோது நான் எடுத்துரைத்தேன்.
பௌத்தர்களுடனும் ஏனைய சமயத்தவர்களுடனும் பூரண ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்னும் முஸ்லிம்களின் விருப்பம் பற்றி நான் நன்கு அறிவேன். இதுவே ஸ்ரீலங்கா தேசத்தில் முஸ்லிம்கள் முழுமையாக இணைந்துகொள்ளவுள்ள ஒரே பாதையாகும்".
Statement by Rauff Hakeem, Leader, Sri Lanka Muslim Congress
A statement I made recently in Sainthamaruthu, Kalmunai, has created a very grave concern among Buddhists leaders and Buddhist prelates including the Jathika Hela Urumaya.
With no further attempts at procrastination, I wish to tender an unreserved apology to all Buddhists of Sri Lanka. I specifically request the Maha Sangha of Sri Lanka to accept this apology for which I, as the Leader of the Sri Lanka Muslim Congress take personal responsibility.
My reference to any grievance of the Muslims was entirely confined to a local issue in a very specific locality. Unfortunately, my choice of words, when removed from the specific context, has resulted in creating a perception that it was a derogatory remark on the Sangha who are the guardians of Buddhism, the predominant faith of our people.
As the Leader of the Sri Lanka Muslim Congress, I have always acknowledged that the Muslims are an integral part of the Sri Lankan nation. We have enjoyed the patronage and the benevolence of the Sinhala people from the time of Sinhala Kings. In fact, it was only a few months ago that I addressed the International Liberal Council in Colombo where I publicly acknowledged the pluralism as practiced by Sinhala Buddhists from the Time of King Senarath who gave refuge to the Muslims persecuted by the Portuguese invaders. Any interpretation of my statement as an expression of intolerance of all Buddhist Sangha is both erroneous and even mischievous.
I am deeply conscious of the desire of the Muslims of Sri Lanka to live in absolute harmony with the Buddhists as well as others practicing other faiths. It is the only path towards the full integration of Muslims in to a Sri Lankan nation.

shame asking pardon. he will find some excuse to come again to people in east to justify this . MR is not fool like CBK. removing him from cabinet. but he used his usual force to make surrender this opportunistic politician.
ReplyDeleteதவளையை தன் வாயாள் கெடும் என்ன பேசுகிறோம் ஏது பேசுகிறோம் என்பதன் தாட்பரியம் அறியாது மக்கள் திரளென அணிதிரண்டிருக்கும் பகிரங்க மேடையிலே மக்களை குசிப்படுத்த உணர்ச்சி வேகத்தில் கண்டதையும் பேசாதிருந்திருந்தால் இப்படி ஒரு தாள்ந்து போய் மன்னிப்பு கேட்கும் நிலை வந்திருக்குமா??? இனியாவது தன் அந்தஸ்துக்கு ஏற்றாட்போல் வார்தைகளை அளந்துபேசும் பக்குவத்தை அல்லாஹ் அவருக்கு வழங்குவானாக , தாமதியாது யாது தன் பேச்சின் விபரீதத்தை உணர்ந்து தயங்காது தக்க தருனத்தில் மன்னிப்பை பெருந்தன்மையுடன் கேட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹகீம் அவர்களுக்கு பாராடுகளும் நன்றிகளும்
ReplyDeleteporuppillatha thalaivan.... ivarkal ellam muslimkalukkaaakaa poooraaaduvaarakalaaa.... nadukkadilil samuthaayatthai vittu vitttu... karaiyeerum thalaivar.... inavaathatthai thuundy virtttu thaaaan matttum thappikka plaaan pannuraar....
ReplyDeleteஇவ்வளவு சீக்கிரத்தில் இப்படிப் பெட்டிப் பாம்பாக அடங்குவார் என்று எதிர்பார்க்கவில்லை.
ReplyDeleteகுறைந்த பட்சம் வாக்களிப்பு முடியும் வரையாவது இந்தப் புதுப் படத்தை வைத்து ரீல் ஓட்டி கிழக்கு மக்களை உசுப்பேற்றுவார் என்று நினைத்தேன்..
தமிழ் தீவிரவாதத்தை ஒழித்துவிட்டோம் இனி முஸ்லிம் தீவிரவாதத்தை ஒழிப்போம் என நா கூசாமல் புத்த தலைவர்கள் மக்கள் முன் பேசும் போது அவற்றை துணிவுடன் எதிர்த்து கேட்க தைரியமில்லாத கோழைகள் நீங்கள். அற்ப பதவிகளுக்காக .....
ReplyDeleteஏமாறுகின்ற சமூகம் இருக்கும் வரையில் ஏமாற்றுபவன் ஏமாற்றிக் கொண்டே இருப்பான். தன்னுடைய பதவி பட்டம் போகும் என்பதற்காக சொல்லப்பட்ட கூற்றை உடனடியாக பாபஸ் பெற்ற மகா பெரும் தலைவர் இவர். பௌத்த பிக்குகள் செய்கின்ற கேவலம் கெட்ட விடயங்களை பாராளுமன்றத்தில் பேசமுடியாத முதுகெலும்பற்ற அரசியல் வாதிகள். அஸ்வர் அவர்கள் பள்ளி வாசலை பௌத்த தேரர்கள் உடைக்கவில்லை என உண்மைக்கு புறம்பான விடயத்தை சொல்ல முடியுமென்றால் நடந்த சம்பவத்தை பேசுவதற்கு என்ன தயக்கம். காரணம் பதவி ஆசை. அதாவுல்லா அவர்கள் பள்ளிவாசல்கள் உடைப்பதில் முஸ்லிம் காங்கிரஸ்தான் பின்னனியில் உள்ளது எனக் கூறுகின்றார். மொத்ததில் எல்லா அரசியல் வாதிகளும் மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கின்றனர்.
ReplyDeleteகடசித் தொண்டா்களே ! கொரவ அமைச்சருக்கு நல்ல ஸறிங் மெத்தையாக வாங்கிக் கொடுங்க. அடிக்கடி பல்டி அடித்து முதுகெலும்பு உடையப்போகிற
ReplyDeleteதலைவரே இதுதான் சரி.
ReplyDeleteஅடிக்க வேண்டிய விதத்தில் அடித்து, தடவ வேண்டிய இடத்தில் தடவியிருக்கின்றீர்கள்.
காட்டிக் கொடுக்க தருணம் பார்த்திருந்த எட்டப்பன்களுக்கெல்லாம் சேர்த்து அடித்திருக்கின்றீர்கள்.
சொன்னது சொன்னதுதான் என்பதனைப் புரியாத நுனிப் புல் மேய்பவர்கள் புலம்பட்டும். நீங்கள் சொன்ன பின்னர்தான் நடுநிலையாளர் பலர் விளித்துக் கொண்டார்கள் என்பதனையும், இனவாதிகள் பலர் அழுத்தங்களுக்குள்ளாகி விழி பிதுங்கினார்கள் என்பதனையும் இவர்கள் அறியவில்லை.
விமர்சனம் செய்பவர்களும் இறைவனிடத்தில் போருப்புக்கூரவேன்டியவர்கள் என்பதை மறந்து விமர்சிக்கின்றீர்கள், தமிழ்லில் typping தெரிந்துவிட்டால் விமர்சனம் செய்ய நம்மை விட்டால் ஆளே இல்லை என்ற எண்ணம் சிலருக்கு...
ReplyDeleteஅமைச்சர் Rauff Hakkem அவர்கள் காவியுடைப்பயங்கரவாதம் என்ற வார்த்தையை பள்ளிவாயல்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் காவியுடைதரிதவர்களை குறிக்கவே பயன்படுத்தினார் என்பது உங்கள் யாருக்கும் தெரியாதா?
இருந்தாலும் அந்த வார்த்தை முழு பௌத்த தேரர்களையும் பாதித்துள்ளது என்பதை புரிந்து பொதுவாக மன்னிப்பு கோரியுள்ளார்.இதுவும் ஒரு முஸ்லிமுக்குரிய/ஒரு சமூகத்தின் தலைவனுக்குரிய பண்பு..
இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டதன் பின்னர்தான் பௌத்தர்களுக்கே அதன் ஆழம் புரிந்துள்ளது என்பது தெரியுமா? அவர்கள் தமிழ் தீவிரவாதம்,முஸ்லிம் தீவிரவாதம் என்று புலம்பிக்கொண்டு இருந்தவர்கள் இன்று காவியுடைத்தீவிரவாதம் பற்றியும் தெரிந்துகொண்டுள்ளார்கள் ஜனாதிபதி அமைச்சர்கள் உற்பட....
சொல்லவேண்டியதை சொல்லப்பட்டுவிட்டது, தெரியவேண்டியவர்கள் தெரிந்துகொண்டார்கள்...
நன்றி ஹகீம் அவர்களே.!
துர் நாற்றம் தேடாதிர்கள் சகோதரர்களே! நலவை நாடுங்கள். எதவது குறை இருந்தால் அதை சுட்டி காட்டுங்கள். குறை தேடி திரியாதீர்கள்.
ReplyDelete