கிழக்கு தேர்தலில் இனவாதம் பேசுவோருக்கு வாக்கு போடாதீர்கள் - அரசாங்கம் கோரிக்கை
இனரீதியான தேர்தல் பிரசாரங்களுக்கும், இனவாத அரசியல் நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காதென அமைச்சரவைப் பேச்சாளரும், தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
தேசியக் கொள்கை, அபிவிருத்தி மற்றும் ஜனநாயக உரிமை ஆகியவற்றை முன்னிறுத்தியே மக்களிடம் வாக்குகளை கேட்க வேண்டும். அரசாங்கத்தின் கொள்கை இதுவாகும் என்பதை தான் தெளிவாகக் கூறிக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு தகவல், ஊடகத்துறை அமைச்சில் இடம்பெற்றது. இதன் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் உரையாற்றுகையில்:
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் களத்தில் இன ரீதியான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பில் உயர் மட்டத்தில் ஆராயப்பட்டு சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அதன் ஓர் அங்கமாகவே அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, பிரதியமைச்சர் பைஸல் முஸ்தபா ஆகியோர் அந்தப் பிரதேசங்களுக்கு நேரில் சென்று கூட் டங்களை நடத்தி மக்களுக்கு தெளிவுப டுத்தினார்கள்.
அதேபோன்று இனவாதம் பேசுபவர்களுக்கு உங்களது வாக்குகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். எவர் எதனை செய்தாலும் மக்கள் தீர்மானிப்பார்கள்.
தேசியக் கொள்கை, அபிவிருத்தி மற் றும் ஜனநாயக உரிமை ஆகியவற்றை முன்னிறுத்தியே மக்களிடம் வாக்குகளை கேட்க வேண்டும்.
அரசாங்கம் தமது பிரசார நடவடிக்கைகளை அந்த அடிப்படையிலேயே முன்னெடுத்துச் செல்கிறது. சில அமைச்சர்களும் இன ரீதியான தேர்தல் பிரசாரங்களில் ஈடு படுவதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இது பற்றி ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கிழக்கில் இனவாதம் பேசுபவர்களுக்கு வாக்குப்போடவில்லை சரி, நாட்டில் இனவாதிகளை வளர்த்துவிட்டு அவர்களது அட்டகாசங்களை அமைதியாக அங்கீகரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு வாக்குப் போடலாமா என்பதனையும் பத்திரிகையாளர் மாநாடு கூட்டிச் சொல்லச் சொல்லுங்கள்.
ReplyDeleteஇல்லாவிட்டால் மாற்று மதத்தவர்களின் வழிபாட்டுத் தலங்களின் மீது அடர்ந்தேறுபவர்களை உடனடியாகக் கைது செய்து நீதி மன்றில் ஆஜர் செய்யுங்கள்.
”மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடமா?”
iven oru kattuvasi,,,, muslimkelukku erpadum parethuoremane pirechinaihelai uodehenkelukkumun ontrumillathu saivethil kaithernthe killadi,,,
ReplyDelete